நான் எனப்படும் நான் : 140
” Its difficult to understand Creative People. They never settle with the existing best. They constantly look for the Next best “



Corporate Training – இதுவே என் முதல் இலக்கு. அதில் நிறைய Challenges இருக்கும் என்பது தான் அதன் மீதான ஈர்ப்பிற்கு காரணம். ( அப்படி எனில் Training ல் Challenges தான் என் ஈர்ப்பு ! ). அப்படித்தான் ஆரம்பித்த பயணம் இது. ஆனால் அங்கேயே நின்றுவிடவில்லை.
Corporate Training ல் தனி மனித பிரச்சினைகளை கொஞ்சம் சரி செய்து கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நிறுவனங்கள் சொல்ல ஆரம்பிக்க .. அப்படித்தான் ஆரம்பித்தது Counselling. அதற்கான படிப்பு முதலிலேயே என்னுடன் இருந்தாலும், நிறுவனங்கள் கேட்க ஆரம்பித்த பின் தான் என் கவனம் அதில் வர ஆரம்பித்தது.
அதே Corporate நிறுவன ஊழியர்கள் ” எங்களின் குடும்பத்திற்கு /மகனுக்கு / மகளுக்கு ஒரு Counselling கொடுத்தால் சிறப்பாக இருக்கும் ” என்று ஆரம்பித்தது தான் Family Counselling.
” என் தம்பி தவறான பழக்கங்களில் தன்னை முழுவதுமாக இழந்து விட்டான். அவனை மீட்டெடுக்க வேண்டும். உங்கள் உதவி தேவை. ” இப்படித்தான் தேவையற்ற பழக்க வழக்கங்களில் இருந்து மனிதர்களை மீட்டு எடுப்பது ஆரம்பித்தது.
” எதிர்கால இலக்கு ஒன்றை Fix செய்ய வேண்டும். உங்களின் உதவியை எடுத்துக்கொள்ளலாமா ? ” அங்கே இருந்து தான் Mentoring ஆரம்பித்தது. இளைய தலைமுறைக்கு இது ஒரு பெரும் வாய்ப்பும் பாதையும். வழியை கண்டுபிடித்து விட்டால் .. இலக்கை அடைவது வெகு தொலைவில் இல்லை.
” தனி மனிதர்களாக நாங்கள் சரியாகவே இருக்கிறோம். குழுவாக நாங்கள் நிறைய தவறு செய்கிறோம் “.அங்கே இருந்து தான் வந்தது Mentoring A Group till it Achieves an Outcome. இது Corporate நிறுவனங்களில் எனக்கான Special Area. இலக்கை அடையும் வரை நான் அந்த குழுவுடன் பயணிப்பேன். இலக்கை அடைந்தவுடன் அவர்களுக்கு வழிமுறைகள் தெரியும் என்கிற மனநிலையில் .. அவர்களுக்கு bye சொல்லிவிட்டு அடுத்த குழுவை நோக்கி நகர்வேன். இதிலும் எனக்கு சவால்கள் முக்கியம்.
இன்னமும் நிறைய இருக்கிறது. Part 2 வில் எழுதுகிறேன்.



ஒன்று மட்டும் உறுதி.
செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய முயற்சிப்பவர்களை நோக்கி உலகம் வேறு வேறு விதமாக வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. Facing Challenges என்னும் சவால்களை விரும்பும் மனமும்,Learning Flexibility எனப்படும் கற்றலில் வளைந்து கொடுக்கும் தண்மையும் .. இருப்பின் … நம் திறமையின் பல பரிமாணங்களை நம் கண்முன் இயற்கை கொண்டு வந்து கொண்டே இருக்கும்.
Facing Challenges, Learning Flexibility … இரண்டும் நம்மிடம் இருக்கிறதா ?
ஆம் எனில் ….நீங்கள் செய்யும் தொழிலுக்கான வாய்ப்புகள் உங்களை வந்து அடையும். நீங்கள் எங்கும் எதற்கும் வாய்ப்பு தேடி அலைய வேண்டியது இல்லை.