நான் எனப்படும் நான் : 141



” Social Media is a beautiful space to inspire people by becoming a Model of Whats been told ! “



Part 01 ல் தொழில் சார்ந்த பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கும். Part 03 ல் மீண்டும் தொழில் சார்ந்த பகிர்வை சொல்கிறேன். இப்போது கொஞ்சம் சமூக வலைதளத்தில் நம் பார்வையை வைப்போம்.



2010 என்று நினைக்கிறேன். Fb யில் வந்து சில நாட்கள் இருந்துவிட்டு பின் என் வேலைகளை கவனித்த வேகத்தில் fb யை மறந்து போனேன். பிறகு .. பல தருணங்களில் fb எனக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட .. ( அதன் பிறகு 2012 என்று நினைக்கிறேன் ) .. மீண்டும் இங்கே வர ஆரம்பித்தேன். அப்போதைக்கு fb இல் அரட்டைகளும், அரசியல் பார்வைகளும், தேவை அற்ற பல பக்கங்களுமாக சுற்றிக்கொண்டு இருந்த போது .. என் பக்கத்தில் கீழ்கண்ட சில முடிவுகளை எடுத்தேன்.








முகநூலுக்கு உண்டான பிரச்சினைகள் / தவறான புரிதல்கள் / விவாதப்பதிவுகள் .. இவற்றை தவிர்த்து .. அப்படியான சூழ்நிலைகள் வந்தால் சம்பந்தப்பட்டவர்களை tag செய்து சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லிவிட்டு Bye சொல்ல வேண்டும். ” பிடிக்காது. ஆனாலும் என் பக்கத்தில் இருக்கட்டும். ” கதை எல்லாம் இல்லை.
” பிடித்தால் இரு. இல்லை என்றால் வெளியேறு ” தான்.



இன்று
Ten K Steps Club – நடைப்பயிற்சி க்கு
READ DOT REVIEW – புத்தக வாசிப்பிற்கு
மகிழ்ந் தீரா! – நிறைய சிரிக்க
@தீரா உலா – பயணத்திற்கு …
Womentrepreneurs India – பெண் தொழில் முனைவோருக்கு
Zenlp 5pm Live Family – 5pm live கேட்டு தன்னை மாற்றிக்கொள்ள தயாராகும் மனங்களுக்கு …
Zenlp Academy – என் தொழில் சார் பக்கம்
HeptA SenZ – உடல் நலம் மன நலம் சார் பிரச்சினைகளில் இருந்து தீர்வு காண.
AtConnect – Covid போன்ற கடின காலங்களில் சமுதாயத்திற்கு முடிந்த அளவு உதவ
இன்னமும் .. சில குழுக்கள்.
இந்த குழுக்களில் அவ்வப்போது முடிந்த அளவிற்கு பதிவுகளை / போட்டிகளை /நல்ல விடயங்களை பகிர முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறேன். இதில் தீரா உலா எனக்கு மிக நெருக்கமான ஒன்று. இதுவரை நிறைய .. பயணங்கள். நிறைய அனுபவங்கள். மக்களின் மகிழ் பின்னூட்டங்கள். புத்தக வாசிப்பு களமும்.



முக நூலிலும் Ego பிரச்சினைகள் வருமே ? என்று கேட்பவர்களுக்கு…
ஆம். மனிதர்கள் இருக்கும் எங்கும் பிரச்சினை வரும் தான். அங்கே என் பதில் மிக எளிமையான ஒன்று. எப்போதும் சொல்வது. Permanent பதில் அது.
” ஒண்ணு … கூட வா. Inspire செய்.
இல்ல … உன் வழியை பார். அங்கும் முடிந்தால் inspire செய். இல்லை எனில் உன் அலைவரிசை மனிதர்களை கண்டுபிடித்து அவர்களுடன் அளவளாவிக் கொள்.
வீண் விவாதங்களுக்கு உனக்கு நேரம் இருக்கலாம். எனக்கு இல்லை. Bye. “


