படமும் கற்றலும் : 028


” அழகு என்று ஒன்று இல்லவே இல்லை. அப்படி இருப்பதாக சொல்லப்படுவதால் ஒரே ஒரு நன்மை தான். அழகுக்காக ஒரு Industry நிறைய தொழில் ஆளுமைகளை உருவாக்குகிறது என்பது மட்டுமே ! “



Katrina Kaif அவரின் பிறந்த நாளுக்கு இந்த புகைப்படத்தை பகிர்ந்த செய்தி ஒன்று மனதை தொட்டது. காரணம் .. அந்த யதார்த்த புகைப்படம். ஒவ்வொரு முறையும் இந்த ” அழகு ” concept ஆளுமைகளை மறைத்துவிட்டு வேறு ஏதோ ஒன்றை நமக்கு Present செய்வது போல இல்லாமல் ” இதுதான் நான் … இதுவே என் முகம் ” என்று தன்னை அவர் தன்னை அறிமுகம் செய்வது.



இருப்பதை அழகாக காண்பிக்க கூடாதா ? என்று ஒரு கேள்வி இங்கே வரும். அந்த கேள்வியை கொஞ்சம் பரிசீலனை செய்வோம்.












வயல்வெளியில் வியர்வையில் உழைக்கும் கணவன் … அவனுக்கு உதவி செய்யும் ப
மனைவி .. மரத்தின் தொட்டிலில் தூங்கும் அவர்களின் குழந்தை .. அங்கே மத்திய உணவை சுவைத்து உண்ணும் அதே கணவன் மனைவி … அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொள்ளும் அந்த முகத்திற்கு எந்த ஒப்பனையும் தேவைப்படாது போகிறதே ? ஏன் ?



யோசிப்போம். உள்ளிருந்தும் அழகாவோம்.


