படம் சொல்லும் பாடம் – 035
” Space is what makes a Family – Not the Compulsory Togetherness ! “



” எனக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. வெளியேறுகிறேன். “
சொல்வது – just திருமணம் செய்துகொண்ட பெண்ணின், எப்போதும் Computer ல் வாழும் பையனின், வள வள என்று பேசிக்கொண்டே இருக்கும் அம்மாவின், Communist அரசாங்க அடக்குமுறையை சந்தித்த அப்பாவின், வழக்கமான கணவரின் – அம்மா, மகள் மற்றும் மனைவி ! ஆம். 35 – 40 களில் ” வீட்டை விட்டு வெளியேறுகிறேன். ஒரு தனி வீட்டில் இருந்துகொள்கிறேன் ” என்று சொல்வது தான் படத்தின் உட்கரு. அதற்கு பின் நடப்பது எல்லாம் .. நம்மை மிக யோசிக்க வைக்கும் நிகழ்வுகள்.



Mechanical என்று ஒரு வார்த்தை நம் பயன்பாட்டில் உண்டு. ” Mechanical ஆ மாறிப்போகிறது வாழ்க்கை ” என்று சொல்லப்படும் அந்த வாழ்க்கை பல விடயங்களை நமக்குள் முன்னிறுத்தும். ஏன் எதற்கு என்றே புரியாமல் … காலையில் எழுந்தால் … மீண்டும் மீண்டும் அதே வேலைகள், அதே வாழ்வியல், அதே கோபம், அதே சண்டை, அதே விளக்கங்கள், அதே இறப்பு, அதே பிறப்பு … என்னடா வாழ்க்கை இது ? என்று தோன்றுமே .. அப்படி எண்ணத்தின் இன்னொரு பகுதியை காண்பிக்கும் இந்த படத்தில் … அந்த பெண்மணி வெளியே செல்கிறேன் என்றதும் … மொத்த குடும்பமும் அவள் மேல் வைத்திருக்கும் பாசத்தை திடீரென வெளிப்படுத்தும்.! எங்கே இருந்தார்கள் இவர்கள் எல்லாம் ? என்பது போல இருக்கும் அந்த நேரங்களில் .. தான் நமக்கும் நம் இருப்பின் ஆழம் புரியும்.



” யாருடனும் பிரச்சினை இல்லை. பின் ஏன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் ? ” என்கிற இந்த கேள்விக்கு பின் இருக்கும் நிகழ்வுகள் தான் நம்மை யோசிக்க வைப்பவை. ஏற்கெனவே இருந்த வீட்டில் சத்தம் பிரச்சினையாக இருக்க, தனி வீட்டில் Music கேட்பது, வாசிப்பது … கவிதை. சொல்லாமல் பல செய்திகளை சொல்லும் அந்த காட்சி தான் படம் சொல்ல விரும்பும் செய்தி.
ஏதாவது பிரச்சினை என்றால் தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமா என்ன ?



” எனக்கு உடம்பு சரியில்லை “
” அப்படி எனில் Doctor ஐ கூப்பிட வேண்டும். உறவினர்களை, என்னை அல்ல. “
என்று போகிற போக்கில் சொல்லும் வார்த்தையின் உண்மை நமக்குள் என்னவோ செய்யும். உடல் சரியில்லை என்று உறவினர்களிடம் புலம்பும் நமக்கு …மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை ?
“நம்மை எல்லோரும் கவனிக்க வேண்டும் ” என்று குழந்தைகள் மட்டும் அல்ல .. பெரியவர்கள் நாமும் ஏதாவது செய்து கொண்டே தான் இருக்கும் – வீட்டிற்குள் !



குறிப்பு ; கணவன் மனைவி மட்டும் பார்க்கலாம். இருவருமாக பார்க்கலாம். சொல்லாமல் நிறைய செய்திகளை புரியவைக்கும் படம். தனித்தனியாக பார்த்தால் இன்னமும் நல்லது. கொஞ்சம் குற்ற உணர்வும், நிறைய புரிதல்களும் வரக்கூடும் !


