படம் சொல்லும் பாடம் – 036



” இந்தக் கணம் அழகானது “



நல்ல தொழில், கை நிறைய பணம், சிறப்பான வாழ்க்கை… கருவுற்று இருக்கும் மனைவி… வரப்போகும் குழந்தையுடன் Video வில் தன்னை பற்றி, தன் குடும்ப உறுப்பினர்கள் பற்றி, தொழில் பற்றி, தனக்கு பிடித்த பிடிக்காத அனைத்தையும் பற்றி விவரிக்கிறார் கணவர் – Cancer ஆல் சில நாட்களில் இறக்கப்போவது உறுதி ஆன பின்பு ! இதுதான் கதை. படம் நம்மை பல இடங்களில் கேள்வி கேட்கிறது. பல இடங்களில் யோசிக்க வைக்கிறது. சில இடங்களில் கண்ணை நனைக்கிறது. ( மெதுவாக அழகாக நகரும் 90 களின் படம். விறுவிறுப்பாக பார்க்க நினைப்பவர்கள் வேறு பக்கம் நகரலாம் )



” இப்படி எல்லாம் சொல்லி என் நம்பிக்கையை உங்களால் ஒன்றும் செய்து விட முடியாது. அது மட்டும் தான் என்னிடம் இருக்கிறது ” என்று தனக்கு Cancer / தன் நாட்கள் எண்ணப்படுகிறது என்று சொன்ன மருத்துவருடன் கோபம் கொள்வதில் இருந்து கணவரின் நடிப்பு .. கடைசி காட்சி வரை .. அசத்தல். மனைவியாக Nicole Kidman. மென்மையான உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். கணவர் இனி இந்த Bed ல் தான் வாழப்போகிறார் என்றவுடன் Camera வை பார்க்காமல் அவர் கண்ணில் வரும் உணர்வு … அட்டகாசம். அண்ணன், அம்மா, அப்பா … அனைவரும் அவரவர் பகுதியை செவ்வனே செய்ய .. பிறக்கும் அந்த குழந்தை … என்ன ஒரு அழகு !



” கோபமும் பயமும் உன்னிடம் உள்ளே இருக்கிறது. அதை வெளியேற்ற வேண்டும். மன்னித்தல் தான் இப்போதைய தேவை “என்று சொல்லும் அந்த சீன Healer ன் சில நிமிட பேச்சுகள் .. யோசிக்க வைக்கின்றன.
” இப்போ நான் எங்கே செல்ல வேண்டும் “
” உன் இருதயத்திற்குள். “
என்கிற simple கேள்வி பதில்கள் அந்த Healer வரும்போதே ..நமக்கு ஏதோ தகவல் காத்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கின்றன.



கடைசி இருபது நிமிடங்கள் தான் கணவராக நடிக்கும் Michael Keaton ன் நடிப்பு வித்தியாச திறமை. படம் முழுக்க துள்ளலாக மாறும் அவர், Bedridden என்ற நிலையை அடைந்தவுடன் …என்ன ஒரு மாற்றம் முகத்தில், பேச்சில், behavior ல் !



கணவன் மனைவியாக பார்க்கலாம். தேவையற்றது இருவரிடம் இருந்தும் விலகக்கூடும். தேவையானது … மீண்டும் உங்கள் இருவருக்குள்ளும் பதியக்கூடும்.


