படம் சொல்லும் பாடம் – 037
” உணர்வுகளை சரியாக கையாள தெரியாத ஒருவன் தலைமை பதவியில் இருக்க முடியாது. கூடாது. வாய்ப்பே இல்லை. “



ஒரு Castle. அது தான் Jail. அங்கே தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவரின் Hitler Ego த்தனத்திற்கும், புதிதாக வரும் கைதிக்கும் ( உயர் இராணுவ அதிகாரி – அரசியல் காரணங்களால் சிறையில் ! ) நடக்கும் “மன நீயா நானா ” தான் இந்த படம்.



Robert Redford கிட்டத்தட்ட நம்ம ஊர் வயதான ரஜினி. அவரின் சிரிப்பு, ஓரப்பார்வை, நிற்பது நடப்பது எல்லாவற்றிலும் ஒரு style அழகாக இருக்கும். சிறையில் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் விடுவது, பிறகு கண்டு கொள்வது, பிறகு சிறைக்குள்ளேயே ஒரு போருக்கான prep நடத்துவது, அதற்கான திட்டங்கள் … என்று வாழ்கிறார் மனிதர். Jailerன் சிரிப்பு நமக்குள் அடுத்தது என்ன என்ற கேள்வியை எழுப்பினால் … Redford ன் சிரிப்பு என்னவோ இருக்கிறது என்று தோன்ற வைக்கிறது.
படத்திற்கு அந்த underground ego த்தனம் தான் உயிரோட்டம். மற்றபடி வழக்கமான cinema வுக்கு உண்டான twist turn எல்லாம்.
படம் முடியும் போது ஒரு சில புரிதல்கள் …







பொறுமையாய் பார்க்க பார்க்க ரசிக்க தோன்றும்.


