படம் சொல்லும் பாடம் – 039
” If you know it’s the Truth, stand by it ! “
அமெரிக்க கால்பந்து வீரர்களுக்கு விளையாட்டால் ஏற்படும் ஒரு பிரச்சினை – தலையில் மோதிக்கொள்வது அவர்களின் மூளையை பாதிக்கிறது. அது தற்கொலை அல்லது இறப்பு வரை செல்கிறது. இதை NFL மறைக்கிறது. ஒரு Pathologist கண்டுபிடிக்கிறார். அவ்வளவு எளிதாக அதை ஒப்புக்கொள்வார்களா ? என்ன நடக்கிறது என்பது தான் கதை. நிஜக் கதை.
Will Smith – பேச்சு, நடை, பாவனை …என்று தன்னை அப்படியே உருமாற்றி இருக்கும் நடிகர். நைஜீரியா வின் Doctor ஐ நமக்குள் கொண்டு வர மெனக்கெடல். ( படத்தில் இருப்பது நிஜ Doctor ). ” உண்மையை நான் ஏன் மறைக்க வேண்டும் ? ” என்கிற நேர்மை கேள்வி. பிணத்தை கழுவி, பிணத்துடன் பேசி, பிறகு அறுவை சிகிச்சையை ஆரம்பித்து … அட்டகாசமான நடிப்பு ! கடைசி காட்சி வரை அவருடன் ஒரு balance தொடர்கிறதே .. இந்த படத்தில் – அதை எப்படி அவரால் கொண்டு வர முடிந்தது ?
” இங்கே எதுவும் Coincidence அல்ல ” என்று சொல்லும் மனைவியின் முகத்தை நேரே பார்க்கும் பார்வையில் அனைத்தையும் நமக்கு புரியவைக்கிறார். என்ன ஒரு நடிப்பு !
” வாரத்தில் ஒரு நாள் NFL க்கு. Church க்கு முதலில் இருந்தது அந்த நாள். இப்போது இல்லை. அதை அவர்கள் விட்டுக்கொடுப்பார்களா ? ” என்பது தான் படத்தின் base. பேராசை, பெருமை, ஆதிக்க மனப்பான்மை … இவை தான் மனித அழிவின் ஆரம்பம். இறக்கும் வீரர்களின் குடும்பங்களை பற்றி யாருக்கு என்ன கவலை ?
மருத்துவ துறையில் உள்ளவர்கள் இந்த படத்தை பார்த்த பின் .. மனதிற்குள் ஒரு வார்த்தை ஒலித்துக்கொண்டே இருக்கும். அது ..
” உண்மையை சொல் “





