படம் சொல்லும் பாடம் – 041



” Everything changes, Slowly but Certainly In another Direction. “



வயதானவர்களுக்கான ஒரு Care center plus Hospital. அங்கே இருக்கும் முதியவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்ளும் Nurse தான் நம் Hero. அந்த இடத்திற்கு சிறையில் இருக்கும் ஒரு பெரும் பணக்கார வயதானவர், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லாமல், வருகிறார். ஒரு காலத்தில் பெரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் அவர். இப்போது உடல்நலம் சரியில்லாத தான் நகரவே தனக்கு ஆள் தேவைப்படும் நிலையில் இருக்கும் மனிதர். இந்த வயதானவருக்கும் இந்த படத்தின் Hero nurse க்கும் ஏதோ ஒரு கடந்த கால பிரச்சினை இருக்கிறது. ( அப்படி இருப்பது அந்த போதைப்பொருள் மனிதருக்கு தெரியாது ! ). பழிவாங்கல் தான் கதை. ஆனால் இறுதியில் நடப்பது தான் Eye For An Eye.



ஏதோ ஒரு வேகத்தில், இள வயதில் தவறுகளை செய்துவிடுகிறோம். ஆனால் அவை நம்மை ஏதோ ஒரு காலத்தில் கண்டிப்பாக பாதிக்கின்றன. குறிப்பாக … நம்முடைய இயலாமை காலங்களில் அவை நம்மை பாதிக்கும்போது நாம் வருந்துவதை தவிர வேறு வழி எதுவும் கையில் இல்லை ! கண்ணுக்கு கண் என்பது கடைசி வரை உண்டு. மனிதர்களால் அல்ல. காலத்தால். அந்த கண்ணுக்கு கண் கணக்கில் … மனிதர்கள் காலத்தின் கருவிகள்.



அந்த வயதான போதைப்பொருள் கடத்தல் மனிதரின் நடிப்பு … அட்டகாசம். ” இது சரிவராது ” என்று மகன்களிடம் அவர் சொல்லும் பக்குவம், மீறிச் செய்து மாட்டிக்கொள்ளும் மகங்களிடம் அவரின் கோபம், தனக்கு உதவி செய்வது தன்னை மெல்ல கொள்ளும் எதிரி என்று தெரிந்ததும் அதை இயலாமையால் எதிட்கொள்ளும் முக பாவனை .. மனிதர் அசத்துகிறார்.
அவரின் அசத்தலுக்கு கொஞ்சமும் குறைவற்ற நடிப்பு Hero உடையது. கண்களால் பேசிவிடுகிறார். பதைபதைப்பு நிறைந்த நிமிடங்களை சிரித்து சிரிக்காமல் அவர் காண்பிக்கும் முக பாவனை இயல்பான ஒன்று.



படம் பார்த்து முடிக்கும்போது ” பேசாமல் மன்னித்து விட்டு விட்டு சென்று விடலாம். பழி வாங்கி என்ன ஆகப்போகிறது ? ” என்று உள்ளே ஒரு வரி ஓடும். அதுதான் படத்தின் வெற்றி.



குறிப்பு ;
குழந்தை பிறப்பதை அப்படியே காண்பித்து இருக்கும் காட்சி ( தேவையா ? ) இருப்பதால் … முதலில் தனியாக பார்த்துவிட்டு பின் யார் எல்லாம் பார்க்கலாம் என்று முடிவு செய்யலாம்.


