படம் சொல்லும் பாடம் – 042
” Its just a Belief. And … Its just a Karma. Still .. both are invisible and Meaningful ! “



கொள்ளையடித்த பணம். அதை எடுத்துக்கொண்டு தப்பி Carல் பயணிக்கும் ஒருவனை Police துரத்துகிறது. யாருமே இல்லாத ஒரு சம வெளியில் தெரியும் ஒரு மண் முகட்டில் வேக வேகமாய் தான் கொள்ளை அடித்த பணத்தை புதைத்து வைத்து, கிட்டத்தட்ட அதை ஒரு ” பிணத்தை புதைத்த இடம் ” போல செய்து விட்டு .. Police இடம் சரண் அடைகிறான். சில வருடங்களுக்கு பின் Jail ல் இருந்து வெளிவரும் அவன் … நேராக தான் புதைத்து வைத்த பணம் என்னவாயிற்று என்று பார்க்க செல்கிறான். போய் பார்த்தால் அவனுக்கு பெரும் அதிர்ச்சி ! அவன் புதைத்து வைத்த இடம் இப்போது ஒரு ” பெயரற்ற மகானின் சமாதியாக / புண்ணியம் வாய்ந்த இடமாக ” இருக்கிறது.
அவனுக்கு அவனின் பணம் தேவை. ஆனால் புண்ணியம் வாய்ந்த இடம் இப்போது அதற்கு குறுக்கே ! என்ன ஆகிறது என்பதே கதை.



மிக Relaxed ஆக ஒரு படம் பார்க்க வேண்டும், ஆங்காங்கே சிரிக்க வேண்டும், படத்தை இரசித்து அதனுடன் பயணிக்க வேண்டும் .. என்றெல்லாம் நீங்கள் விரும்பினால் … அதிக Dialogue இல்லாத இந்த படம் ஒரு சிறந்த Choice !
Characters தான் எந்த ஒரு படத்தின் / கதையின் அழகே ! கொள்ளை அடித்தவன், அவன் கூட்டாளி, புண்ணியம் வாய்ந்த இடத்தின் காவலாளி, அவரின் நாய், தங்கும் விடுதியின் காப்பாளர், மருத்துவர், அவரின் Assitant, clinic கிற்க்கு வரும் வயதான பெண்கள், அவர்களின் பிரச்சினைகள் ( சிரித்து சிரித்து வயிறு வலிக்க கூடும் ! ) சவர தொழிலாளி, அவரின் கடையில் எப்போதும் அமர்ந்து இருக்கும் இருவர், வெற்று மண்ணில் நம்பிக்கையுடன் உழும் விவசாயி, அவரின் மகன் … என்ன ஒரு set of Characters ! படம் விறுவிறுவென்று பயணித்து கொண்டே இருக்கிறது.



” நீ ஏன் புண்ணியம் வாய்ந்த இடத்தின் Board ஐ திருடினே ? “
“வேற எதுவும் வேலை இல்லை. பொழுது போகலை. அதான் “
மெல்லியதாக பயணிக்கும் வசனங்கள் சொல்பவை ஏராளம்.



” அநேகமாக நீங்கள் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். உங்கள் உடை அப்படிதான் இருக்கிறது. பேச்சும். “
என்று கொள்ளை அடித்தவனை பார்த்து சொல்லும்போது அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாது முழிக்கும் இடம் … ஹஹஹ்ஹ



” என் நாய்க்கு தங்கப் பல்லை வைக்க முடியுமா ? எனக்கு அதை விட்டால் வேறு யாரும் இல்லை “
மனிதர்களை பற்றி ஒன்று புரிகிறது. Dependant என்று வந்துவிட்டால் அனைத்து முட்டாள்தனங்களும் அவர்களுடன் வந்துவிடுகின்றன.



குடும்பத்தோடு பார்க்கலாம். ஆங்காங்கே சிரிக்க தோன்றும் போது உம்மென்று இருக்க முயற்சிக்காதீர்கள். ஏன் எனில் இந்த படத்தின் Characters அப்படித்தான் இருப்பார்கள். பிறகு உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் 







