நான் எனப்படும் நான் : 144
” There is a Buddha in Everyone.
And … There is a Human in Everyone.
Both are Different. “
” நான் நல்லவன் தான் .. ரொம்ப நல்லவன் இல்லை “
ன்னு ரஜினி சொல்லும் வசனம் ” பேட்ட “யில் வரும். அது தான் உலக யதார்த்தம். எல்லோரும் நல்லவர்கள் தான். ஆனால் எல்லோரிடமும் கொஞ்ச ” அப்படி எல்லாம் நல்லவன் நல்லவள் இல்லை ” யும் உண்டு. அதை புரிய வேண்டும் எனில் .. இரண்டு வழிகள்.
1. பார்த்து கற்றுக்கொள்வது
2. பட்டு கற்றுக்கொள்வது 

” Either You See and Learn.
Or .. Get Beating and Learn “
ஒரு Monk தனியாக நடந்து கொண்டு இருந்தார். வழியில் … வயதான மூதாட்டி நடக்க தடுமாற, அதை கவனித்த Monk அருகில் சென்று உதவ ஆரம்பித்தார். நீண்ட தூர நடைக்கு பின் அந்த மூதாட்டியின் வீடு வந்தது. அங்கே அந்த மூதாட்டியை விட்டுவிட்டு … மீண்டும் Monk நடக்க ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் .. நாய் ஒன்று அவரை பார்த்து குரைக்க .. அருகில் இருந்த கற்களால் அதை அடிக்க ஆரம்பித்தார்.
நாய் அந்த இடத்தை விட்டு ஓடியது. முதலில் முறைத்து, பின் .. சிரித்துக்கொண்டே மீண்டும் நடக்க ஆரம்பித்தார் Monk.
” Other Identity stays as in-built one – always. “
” இப்போதானே அந்த மனுஷன் கிட்ட சிரிச்சு பேசுனீங்க. என்கிட்ட ஏன் இப்படி கோபப்படுறீங்க ? “
கேட்ட மனைவியிடம் கணவர் கோபமாக சொன்னார்.
” எப்பவாவது வருபவனுக்கு ஓர் முகம். எப்பவும் வருபவளுக்கு ஓர் முகம். அவ்வளவு தான் “
” Never Make God out of a Human.
Make Human out of Human.
Its just Common Sense. “





