நான் எனப்படும் நான் : 145
” Let’s Support each other. From there … It spreads on its own “



Car ல் ஏறப்போகும் முன் அவரை கவனித்தேன். வயதானவர். வழக்கமாக அனைவரும் கேட்கும்
” ஐயா சாமி … ” வகைகளை அவர் கேட்கவில்லை. நேரடியாக கண்களில் சந்தித்தார். ” உதவ வேண்டும் என்றால் செய். ” என்று சொல்லாமல் சொல்லும் ஒரு பார்வை அது. அருகே சென்று கேட்டேன்.
” சாப்பிட்டீங்களா ? “
இல்லை என்று தலையை அசைத்தார். காவி உடை. நெற்றியில் மூன்று பட்டை விபூதி. கைகளில் மார்பில் ஆங்காங்கே வும் அந்த விபூதி படர்ந்து இருந்திருந்தது.
” என்ன சாப்பிடறீங்க “
சொன்னார்.
அருகே இருந்த Hotel இல் அவர் சொன்னதை order செய்து வாங்கிக்கொண்டு வந்தேன்.
அமைதியாக சாப்பிட்டார்.
” எங்கே இருந்தீர்கள் / இருக்கிறீர்கள் ? “
ஏதோ சொன்னார். கேட்கவில்லை என்று சைகை செய்தேன்.
” எங்கும் இருக்கிறேன் “
இப்போது கேட்டேன். சிரித்தேன். அவரும் சிரித்தார்.
” உங்களை பற்றி கேட்கலாமா என்று தெரியவில்லை ” என்று மீண்டும் இருவரும் சிரித்தோம்.
” கடந்ததை பேச வேண்டாமே. நான் பயணித்து கொண்டே இருக்கிறேன். யாரோ ஒருவர் உணவு கொடுக்கிறார். இன்று நீங்கள். “
அவரை கவனித்தேன். தோள்பட்டையில் ஒரே ஒரு பை … அதில் வரிசையாக ஒழுங்காக அடுக்கப்பட்ட என்னவோ !
” பயணித்து கொண்டே இருக்கிறீர்களா ? “
” ஆம். ” வாங்கி வந்த தண்ணீரை குடித்துவிட்டு சொன்னார்.
” எங்கிருந்து வருகிறேன் என்பது வேண்டாம். எங்கே செல்கிறேன் என்பது வேண்டாம். பெயர், கடந்த காலம் எல்லாம் வேண்டாம். யாரோ உணவு கொடுக்கிறார்கள். பயணிக்கிறேன் “
அமைதியாய் அவரை பார்த்தேன்.
” நான் பிச்சை எடுக்கவில்லை. மனித மனத்தின் உதவும் குணத்தை சந்திக்கிறேன். அனைத்து நாட்களிலும் நான் அந்த மனதை சந்திக்கிறேன். மனிதம் இன்னமும் இருக்கிறது “
என்று சிரித்தார்.
என்ன மனிதர் இவர் ?
சாப்பிட்டு முடித்து எழுந்து நின்று நன்றி சொன்னார். நானும் நன்றி சொன்னேன்.
” நன்றி சொல்லவில்லை எனில் என்ன வாழ்க்கை “. என்று அவர் சொல்ல …
இருவரும் அமைதியாக இருந்தோம்.
” சரி என் நடையை ஆரம்பிக்கிறேன். அடுத்த மனதை சந்திக்க வேண்டி இருக்கிறது “
நடக்க ஆரம்பித்து விட்டார். திரும்பிக்கூட பார்க்கவில்லை.
” There is a Mystic side in every Human Being. Connecting there Makes us Connected “


