நான் எனப்படும் நான் : 147
” Check How They face everything now.
Then, we may find a Pre Sketch about Their Future “



” யாரை பிடிக்கும் ? “
” மாமாவை “
” மாமா திட்டுவாங்களா ? “
” திட்டினாலும் பிடிக்கும் “
இந்த வரிகள் மருமகன் சொன்னது. மீண்டும் மீண்டும் மனதில் ஓடும் வரிகள். எப்படி மருமகனால் அப்படி சொல்ல முடிந்தது ? திட்டினாலும் ஏன் பிடிக்கும் ?
மிக சுலபமான காரணம் ஒன்று இருக்கிறது. குழந்தைகளுடன் பழகும்போது அவர்களாக மாறுவதும், அவர்களுக்கான Space ஐ கொடுப்பதும் தான்.
” மாமா .. பாட்டு கேட்கலாமா ? “
” உனக்கு பிடிச்ச பாட்டு எடுத்து வச்சிட்டேன். கேளு .. “
சிரிப்போடு பாட்டு ஓட ஆரம்பிக்கிறது.
” ரகிட ரகிட .. “
அது மாதிரியான மகிழ்வு தான் குழந்தைகளுக்கு பொதுவான ஆரம்ப புள்ளி.
பாட்டு, ஓவியம், விளையாட்டு, இசை வாசிப்பு, புத்தக வாசிப்பு, உடற்பயிற்சி, புகைப்படம், Cinema, Cellphone, School … என்று அனைத்து பகுதிகளிலும் .. அவர்களுக்கு தேவை ஒரு Space. கொடுப்பவர்கள் மனதிற்குள்.
கொடுக்க தவறுபவர்கள் மனதிற்கு வெளியே !
அவ்வளவு தான் அவர்களின் உலகம்.



ஒரு முறை நானும் மருமகனும் அருகில் இருந்த ஏரிக்கு சென்றோம். சிறு கற்களை எடுத்து அங்கே தண்ணீரில் வெட்டி வெட்டி வீசும் விளையாட்டை விளையாட ஆரம்பித்தோம்.
” மாமா நீங்க வீசறது நிறைய முறை நீரை வெட்டுது “
எப்படி அதை பிடிக்க வேண்டும், வீச வேண்டும் .. சொன்னேன்.
கற்றுக்கொண்டான்.
மீண்டும் வீசினான். வரவில்லை.
மீண்டும் சொன்னேன். இந்த முறை வந்தது. இரண்டு முறை சொல்ல வேண்டி இருந்தது.
அவ்வளவு தான் அவர்களின் கற்றல்.



” மாமா .. Photo எப்படி எடுக்கறீங்க ? “
சொன்னேன்.
” இங்கே … இப்படி எடுத்தா நல்லா இருக்குமா மாமா ?
அட்டகாசமான Angle அது. எடுத்தேன்.
” காட்டுங்க “
செய்தேன்.
” நல்லா இருக்கா ? ” அவன் கேட்டான்.
” எப்படி இருக்கு ? ” நான் அவனை கேட்டேன்.
” இன்னும் இப்படி எடுக்கலாமா மாமா ? “
எடுத்தேன். பார்த்தான்.
” ஹ்ம்ம் .. இப்போ நல்லா இருக்கு “
அவ்வளவு தான் அவர்களின் Creative சுதந்திரம்.



குழந்தைகளின் உலகம் மிக நுண்ணியது.
கொஞ்சம் Space.
கொஞ்சம் கற்றல்.
கொஞ்சம் சுதந்திரம்.
அங்கே தெரியும் எதிர்காலம் தான் அவர்கள் நமக்கு காண்பிக்கும் Pre Trailer.
அநேகமாக மருமகன் – சுதந்திரமான கற்றலின் ஆளுமையாக வரக்கூடும். வரட்டும். அமர்ந்திருப்பது மருமகனின் Behavior அல்ல. அவன் சொல்ல விரும்பும் எதிர்காலம். தனி ஒரு ராஜாவாக அவன் உலா வரவிருக்கும் காலங்கள் மிக அருகில்.
அன்று… நான் இந்த எழுத்தை அவனுக்கு வாசித்து காண்பிப்பேன். அநேகமாக அவன் ” சும்மா இருங்க மாமா ” என்று சிரிக்க கூடும்.
வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது – எதிர்காலத்திலும் !


