நான் எனப்படும் நான் : 148
” Memories, if ignited Properly, serves as Treasures “



” ஆரு .. புதுசா இருக்கீயயளே.”
” கொப்பனாபட்டி “
” எங்க “
சொன்னேன். சிரித்தார்.
” அப்ப இப்ப இங்க இல்லயா ? “
சொன்னேன்.
” ஊரணி பாக்கவும் குதிச்சிட்டு போகலாம்னு வந்தீகளா ? “
இருவரும் சிரித்தோம்.
” அதுசரி .. அங்கன புறாக் கூண்டு குளியல் தானே ? இங்கன நல்லா குளிக்கலாம். முக்கி எழுங்க. மொத்தமும் போகட்டும் “
எப்படியான மனிதர்கள் ! நட்பும் வரமுமாய் பேச்சு !!
” வழுக்குமாய்யா ? “
” இந்த .. இங்னக்குள்ள இருந்து குதிங்க. வழுக்காது “
குதித்தேன்.
பெரும் ஊரணி. சதுர வடிவம். நான்கு புறமும் படிக்கட்டுகள்.
” அங்கன பொம்பளைக குளிப்பாக ” என்று சிரிக்கும் மனிதர்கள். ( Eve Teasing … எல்லாம் நகரத்தில் தான் ! ). இரண்டு படிக்கட்டுகள் அவர்களுக்கு. 50% இட ஒதுக்கீடு எல்லாம் இங்கே மிக யதார்த்தம்.
நீரில் குதித்தால் சுத்தமாக நம்மை வாங்கிக்கொள்கிறது.
” மீன் இருக்கு. அழுக்கை மொத்தமும் அது சரி பண்ணிடும் “
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. மீனுக்கும் நல்லது. மனிதனுக்கும் நல்லது. சதுரமாக நீச்சல் அடித்து குளித்து வெளியே வந்தால் .. Soap அற்று Shampoo அற்று முடி பறக்கிறது.
” The More Realistic we are The More Realistic our Thinking will be “



உடை மாற்றும்போது வந்த அவரை கவனித்தேன். வயதானவர்.
” சிவ சிவ “
என்று வேண்டினார். சூரியனை கும்பிட்டார். உடைகளை களைந்து துண்டை கட்டிக்கொண்டு நீரில் குதித்தார். வயது எழுபது இருக்கலாம்.
நீருக்குள் இருந்தும் சூரியனை நோக்கி அவர் வேண்ட ஆரம்பித்தது காதில் விழுந்தது.
” எல்லோரும் நல்லா இருக்கணும் “
மந்திரத்தை முடித்துவிட்டு நீருக்குள் காணாமல் போனார்.
இங்கே மதத்தின் குறியீடு ” எல்லோரும் நல்லா இருக்கணும் ” அவ்வளவுதான் !
” வரேங்யா “
கிளம்பும்போது சொன்னேன்.
” வாங்க வாங்க …” கையெடுத்து கும்பிட்டு சிரித்து அனுப்பினார்.
அந்த சிரிப்பு கொடுத்த Visual Massage இன்னமும் மனதில் நிற்கிறது.
இதைத்தான் நகரத்தில் தேடிக்கொண்டு இருக்கிறேன். இன்னமும் கிடைக்கவில்லை !
அவர் யாரென்று என்ன மதம், இனம், சாதி என்று எனக்கு தெரியாது. அவருக்கும் என்னை பற்றி தெரிய வாய்ப்பில்லை. இது அளவிற்கு தான் இங்கே மதம் இனம் சாதி எல்லாம் தேவை. இங்கே வந்து மதம் பற்றி வகுப்பு எடுப்பவர்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அவர்கள் மீண்டும் மீண்டும் தோற்பது இதனால் தான் என்று அவர்களுக்கு இப்போது மட்டும் அல்ல .. எப்போதும் புரிய வாய்ப்பில்லை !
” If Religion is not Producing wellness to all Human Beings, It becomes the First Enemy for Humans ! “


