படம் சொல்லும் பாடம் – 045
” Parenting is not about Re Directing Children. Its about Re Setting the Mind of Parents ! “



முன் அறிவிப்பு ;
” பெற்றோர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். பெற்றோர்களும் … பார்க்கும் முன் .. மனதை திடப்படுத்திக்கொண்டு பார்க்கவேண்டும் ” – என்பதை சொல்லிவிட்டு கதைக்களம் நோக்கி நகர்கிறேன். ( சில காட்சிகள் நம்மை அந்த படத்தின் பெற்றோர்களை போலவே Screen ஐ பார்க்க வைக்க விடாமல் செய்யும். இந்த தலைமுறை பெண்ணை / ஆணை பெற்று இருப்பின் முதிர்ச்சி தேவை நமக்கு – இந்த படத்தை பார்க்க. “



Teen குழந்தையை நோக்கி ” உன் நண்பியை நீதான் கொன்றாய் ” என்பதுடன் ஆரம்பிக்கும் படம் இறுதி வரை நம்மை ஒரு Emotionally Tensed ஆக வைப்பதில் இருக்கிறது படத்தின் கரு. ” நான் கொல்லவில்லை ” என்று அந்த teen பெண் நிதானமாக சொல்லும்போது .. ‘ இந்த பெண்ணின் வாழ்க்கை இதில் கெட்டுவிடக்கூடாதே ‘ என்ற பதற்றம் நமக்குள் எழுவதை தவிர்க்க இயலாது. அப்பா அம்மா தம்பி என்று Court ஒவ்வொருவராக சந்திக்கும்போது … நமக்குள் கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் ஏமாற்றம், நிறைய கோபம் .. அனைத்தும் வரும். வந்தே ஆகும்.



அப்பா அம்மா Position அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அதிலும் இந்த தலைமுறை Teen ஆண் பெண் குழந்தைகளை, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பாங்கை, ” நீ என்னை கேள்வி கேட்காதே ” என்று சொல்லும் வேகமும், ” எனக்கு தெரியும் ” என்று ஆண் பெண் நட்புக்களை select செய்யும் வேகமும் … அப்பா அம்மா Position அவ்வளவு எளிதான ஒன்று நிச்சயமாக இல்லை.
உங்களின் teen குழந்தை வீட்டில் நீங்கள் சொல்வதை கேட்டு, சுமாராக மதிப்பெண் பெற்று … நல்ல பிள்ளையாக இருந்தால் முதலில் நாம் மகிழ வேண்டும். அல்லது .. அதற்கு பின்னே ” வேறு எதுவும் கூட இருக்கலாம் ” என்கிற பார்வையும் வைத்திருக்க வேண்டும். இதுதான் …. இந்த படம் சொல்லும் இன்னொரு பார்வை.
அதே சமயம் teens எங்கேயெல்லாம் தவறு செய்ய வாய்ப்புகள் உண்டு என்பதை படம் நமக்கு காட்சிகள் வழி சொல்கிறது. French படம் என்பதால் நமக்கு கலாச்சார அதிர்ச்சி அங்கங்கே இருந்தாலும் … நம் கலாச்சார அளவிற்குமான வாழ்க்கை இதில்
” வரக்கூடும் ” என்கிற உண்மையை நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.



Court ல் அந்த தரப்பு /எதிர்தரப்பு கேட்கும் கேள்விகள் / பதில்கள் நம்மை யோசிக்க வைக்கும். ஒரு பெற்றோராக படம் பார்த்தவுடன் நமக்குள் ஒரு பயம் வரும். அது பயம் அல்ல. நம் பிள்ளைகளுக்கு இன்னொரு உலகம் இப்படியும் இருக்கும் வாய்ப்பு உண்டு என்கிற பார்வை. இதுவரை அப்படி யோசிக்காததால் தான் நமக்கு பயம் வருகிறது.



முன் அறிவிப்பை மீண்டும் படித்துவிட்டு படம் பார்க்கவும்.


