படம் சொல்லும் பாடம் – 044
” Will never expect any external support. Because … Will itself an Universal Solution Finder “



#RobertRedford நான் விரும்பும் கதாநாயகர்களில் மிக முக்கியமான ஒருவர். மிக யதார்த்தமாக நடிக்கக்கூடிய அந்த நடிகர் மட்டுமே இந்த படத்தின் Character ! நம்ப முடிகிறதா ? 100 நிமிடங்களுக்கு .. ஒரே ஒரு மனித வாழ்க்கையை பார்க்கிறோம். அதுவே என்னை பொறுத்தவரை பெரும் சாதனை !
ஒரு படகு – அதில் கப்பலில் இருந்து விழுந்த ஒரு container வந்து மோதுகிறது. அதனால் படகில் ஏற்படும் சிறு பிரச்சினையுடன் ஆரம்பிக்கும் படம் .. All Is Lost … என்கிற தலைப்புக்கு சரியாக .. படம் முழுக்க ஒவ்வொன்றாக தன்னிடம் இருந்து பிரியும் போது .. ஒரு மனிதன் அதை எப்படி எதிட்கொள்கிறான் என்பதே படத்தின் ஓட்டம்.
Cast Away வை சிறந்த படமா ? என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால் Comparison ல் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு Character … படம் ஆரம்பித்து முடியும் வரை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை … சற்றும் திரையை விட்டு கண் அகலாமல் பார்க்க வைக்கும் படம் தான் இது.
மொத்த படகும் கையை விட்டு போகும் போது .. அந்த கடைசி விடுதலில் தன் கண்ணில் காண்பிக்கும் இயலாமையை இதை விட ஒரு நடிகர் அழகாக சொல்ல முடியுமா ? இடியும் மின்னலும் வர .. மிக நிதானமாக ஆனால் inch inch ஆக .. தன் இருத்தலை முன்னிறுத்த செய்யும் நிகழ்வுகளை பார்க்கும்போது .. வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்து விட முடியும் என்கிற நம்பிக்கை அழகாக வளர்கிறது.
பொதுவாகவே Robert Redford ன் யதார்த்த நடிப்பு மிக முக்கியமான ஒன்று. இன்னொரு படத்தில் வங்கியில் கொள்ளை அடிக்கும் முதிய மனிதனாக அவரின் நடிப்பு மிக Casual மற்றும் Cool ஆக இருக்கும். படம் முழுக்க சிரிப்புடனும். இங்கேயும் பெரும் பிரச்சினைகளின் பதட்டம் தன்னுள் வராமல் ஒரு மனிதனால் நடிக்க முடியுமா என்பது ஆச்சர்யம் தான். ( சில இடங்களில் மட்டும் கண்ணில் உடலில் பதட்டம் வரும். )
பார்த்து விட்டு ஒரு 10 நிமிட நடை சென்று வாருங்கள். மனம் மிக தையிரியமாக இருப்பதை உணரலாம்.


