நான் எனப்படும் நான் : 150
” Living for The World
or
Living for The World Of Our Choice ? “



” மனதுக்கு மிக கடினமாக உணர்கிறேன் ” அந்த பெண்மணி சொல்ல
” எது அப்படி கடினமாக உணர வைக்கிறது ? “
நான் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தார். சிரித்தார். பின் சொன்னார்.
” இந்த உலகம் நம்மை பார்த்து கேட்கும் கேள்விகள் தான்… வேறென்ன ? “
இருவரும் மென்மையாக சிரித்தோம்.
” அவர்கள் ஏன் உங்களை கேள்வி கேட்க வேண்டும் “
இப்போது அவர் என்னை, என் கண்களை கேள்வியற்ற ஆழத்துடன் பார்த்தார்.
” அப்படி என்றால் ? ” அவர் புருவத்தை உயர்த்தி கேட்க …
” உலகத்தில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். உலகம் ஏன் உங்களை கேள்வி கேட்க வேண்டும் ? “
மௌனம் அங்கே சிறிது நேரத்தை குத்தகைக்கு எடுத்தது.
” May be … நான் தகுதியானவள் என்று அவர்கள் நினைத்து இருக்கலாம். இல்லை எனக்கு தகுதி இருக்கிறதா என்று அறிய இருக்கலாம். “
” சரி. அப்படி என்றால் .. உலகம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும் ? பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று இருக்கிறதா என்ன ? அல்லது .. உங்களை தகுதியானவள் என்று காட்டிக்கொள்ள பதில் சொல்ல தோன்றுகிறதா ? “
” Gosh … … இப்படி நான் நினைக்கவில்லையே ! ” சொல்லிவிட்டு வான் பார்த்தார். பிறகு சொன்னார்.
” ஆம். நான் பதில் சொல்ல தேவை இல்லை தான் “
இருவரும் இப்போது அதிர்ந்து சிரித்தோம்.
” கேள்விகளை வாங்கிக்கொள்ளலாம். Unlimited.
ஆனால் பதில்களை ?
நாம் தான் முடிவு செய்ய வேண்டும். Limited. “
சில நேரங்களில் Counselling sessions ன் ஆழம் நம்மை மிகவும் யோசிக்க வைக்கும். அல்லது .. வேறு உலகத்துக்குள் கொண்டு சென்று விடும். பெரும்பாலான Counselling sessions க்கு பின் .. நான் Either காலாற ஓர் நடையும், அல்லது, பாட்டோடு ஒரு Drive ம் செல்வது உண்டு.
Sometimes We need to Vacate One Compartment and Settle in other for some time to get back to the Old with New Found Energy !



இந்த உலகின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும் எனில் ஒருவன் அல்லது ஒருத்தி க்கு May Be ஏழு ஜென்மங்கள் தேவைப்படுகிலாம். அல்லது .. ஒரே ஜென்மத்தில் ஒரே ஒரு பதிலை சொல்லி வாழலாம்.
அந்த பதில் ” அமைதியாக கடப்பதே ! “
” Silence is not just an answer but Its a Final answer “



” தியானம் முடிந்ததா குருவே ? ” என்ற சீடனின் கேள்விக்கு குரு பதில் சொல்லவே இல்லை, இறக்கும் வரை.
குரு இறந்த பின் .. சீடன் அப்படி ஓரு கேள்வியை யாரிடமும் கேட்கவில்லை. அவன் குருவாக மாறியபோது பேசிய ஒரே வரி ..
” முடிவில்லா தியானம் தொடர்கிறது. “


