படம் சொல்லும் பாடம் – 046
” In the World of Children, There are No Religions. They connect with other kid as a kid and Live in Present “



சமீபத்தில் பார்த்த படங்களில் மிக மிக யதார்த்தமாக உண்மைகளை சொன்ன படம். குழந்தைகள் கதை என்றாலே பெரும் உண்மைகள் மிக எளிதாக சொல்லப்பட்டு விடும்.
Germani – Hitler படையின் இராணுவ முக்கிய பிரிவின் குடும்பம் / கணவன் மனைவி மகன் மகள் / இவர்கள் சார்ந்த கதை. மாற்றலில் வேறு இடம் போகும் குடும்பத்திற்கு அந்த இடத்திற்கு மிக அருகில் இருக்கும் ” Concentration Camp ” பற்றி தெரியாது. அதற்கு தலைமையாகவே தன் அப்பா வந்திருக்கிறார் என்பதும் தெரியாது. தன் பையன் வீட்டில் இருந்து அவ்வப்போது வெளியேறி Camp ல் இருக்கும் யூத பையனோடு உறவாடுவதும் தெரியாது. கடைசியில் தன் பையனுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது ! அவ்வளவு தான் கதை !
” உனக்கு ஒரு எண் வழங்கப்பட்ட ஆடையை அணிந்திருக்கிறாயே … அது என்ன விளையாட்டிற்கான ஆடை ? “
என்று கேட்கும்போது நாம் எந்த அளவிற்கு மனித நேயத்தை இழந்திருக்கிறோம் என்று புரிய ஆரம்பிக்கிறது.
” மருத்துவம் படித்த நீங்கள் ஏன் உருளையை உறிக்கிறீர்கள் ” என்ற கேள்விக்கு சிரித்து பதில் சொல்லும் யூத மருத்துவர்….
” 12 மணி ஆயிடுச்சு ” என்று சொல்லும் பையனிடம்
” வகுப்பை எப்போது முடிக்க வேண்டும் என்பது ஆசிரியர் கையில் இருக்கிறது ” என்று கடினம் காட்டும் ஆசிரியர்….
” ஒரே ஒரு நல்ல யூதரை நீ வாழ்க்கையில் கண்டுபிடித்து விட்டால் நீ ஒரு சிறந்த Explorer ” என்று பையன் மனதில் நஞ்சை விதைக்கும் அதே ஆசிரியர் …
” வேலை செய்ய போன அப்பா வரவே இல்லை ” என்று தன் அப்பாவை பற்றி சொல்லும் அந்த யூத பையன்..
இன்றைய அரசியலை அப்படியே உரிக்கும் நிகழ்வுகளாக காட்சிகள்.
தன் அம்மாவின் சடலத்தை புதைப்பதில் கூட ” Hitler ” என்ற ஒரு வார்த்தை வரும் அளவிற்கு தற்குறி அரசியல் செய்யும் Hitler, மகள் சட்டென Hitler ஐ கொண்டாடுவதை கண்டு பயப்படும் அம்மா … என்று படம் முழுக்க நெறிஞ்சி முள் காட்சிகள்.



மனதுக்கு இதம் ஆனவன் மனிதன் – என்பதில் இருந்து விலகி …ஒருவன் கலக்க நினைக்கும் நஞ்சு அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கிறது என்பது தான் காட்சி அமைப்புகள். படம் பார்த்த பின் இன்றைய இந்தியா ஞாபகம் வந்தால் அது இப்போதைய அரசின் அரசியல்வாதிகளின் தோல்வி !



படம் பார்த்துவிட்டு, கொஞ்சம் அமைதியாக அமருங்கள். உள்ளே பல கேள்விகள் ஒலிக்கும். அந்த கேள்விகள் இன்றைய ஆட்சியை அரசியல்வாதிகளை மாற்றும் அளவிற்கு இருந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. படம் அவ்வளவு வலிமையானது !


