நான் எனப்படும் நான் : 152
” Virtual World will Rule Future, Whether we like it or Not “



வாழ்க்கையில் நான் விரும்பாத ஓர் விடயம் – online sessions. வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் பாடங்களில் மிக முக்கியமான ஒன்று … Flexibility. வளைந்து கொடுக்கும் தன்மை மிக முக்கியமான ஒன்று. அதைத்தான் pandemic சொல்லிக்கொடுக்கிறது. நேரில் மட்டுமே Sessions என்று தீர்க்கமாக இருந்த எனக்கு .. online Platform மிக ஆச்சரிமான உலகமாகவே இருக்கிறது.
U.S, Germany, Chile, Canada, Singpore, இந்தியாவின் பிற பகுதிகள் … என்று விரியும் இந்த வகுப்புகள் .. எனக்குள் பல எதிர்கால புரிதல்களை கொண்டு வந்திருக்கின்றன.






கண்ணை Screen ல் வைத்துக்கொண்டே இருப்பது தான் பெரும் Challenge. காலையில் 04.30 மணிக்கு ஆர்ம்பமாகும் வகுப்புகள், இரவு 08.00 அல்லது 10.00 மணி வரை செல்கிறது. ஒரு வகுப்பு நடந்து முடிந்தவுடன் ..கிடைக்கும் Break ல் வெளியே இயற்கையை சுவாசித்துவிட்டு உள்ளே மீண்டும் வந்து அடுத்த வகுப்பை ஆரம்பிப்பது எல்லாம் .. நினைத்து பார்க்க முடியாத சவால். ஆனாலும் செய்ய முடிகிறது.
கண்களுக்கு என்று சிறிய பயிற்சியை தினமும் செய்கிறேன். ஆனாலும் .. கண்கள் கெஞ்சுவது உண்மை என்பதால் தான் அவ்வபோது எடுக்கும் break.



எனக்கு இருக்கும் கேள்விகள் சில.
” மீண்டும் நேரில் பார்க்கும்போது மக்களால் இயல்பாக பேச முடியுமா ?.
பேசுவதையே முதலில் விரும்புவார்களா ?. அல்லது எதுவாக இருந்தாலும் .. இனி Online ல் பேசுவோம் என்பார்களோ ?
உணர்வுகள் என்பது நேரில் பார்க்க அல்ல – என்று தோன்றுமோ ? “
கவனிப்போம். இங்கே தானே இருந்து பார்க்க போகிறோம் – நாம் அனைவரும்.


