நான் எனப்படும் நான் : 153
” Sometimes Take offline. You may witness a Beauty you never ever thought. ! “



சாலையில் பயணிக்கும் போது …… அவ்வப்போது நான் Map ஐ கவனித்து Off Road ல் / கிராம சாலைகளில் பயணிப்பது உண்டு. அப்படி பயணித்த போது கிடைக்கும் காட்சிகள் எனக்குள் இருக்கும் புகைப்பட கற்றாளனுக்கு பெரும் ஊட்டம்.
சேலம் கள்ளக்குறிச்சி – சாலையில் – நத்தக்கரை Toll Gate டிற்கு கொஞ்சம் முன்னாள் ஒரு சாலை இடது கைப்பக்கம் திரும்பும். அதில் சிறிது தூரம் பயணித்து, பின் வலது பக்க சாலையை எடுத்து, அதில் சிறிது தூரம் பயணித்து, பின் மீண்டும் வலது புற சாலையை எடுக்கும் போது ஒரு பாலம் வரும். ( மேலே Railway Line கீழே சாலை ! ). அந்த சாலை மீண்டும் NH க்கு நம்மை கொண்டு வந்து சேர்க்கும். அதிகபட்சம் 15 நிமிட சாலை பயணம். ஆனால் .. அழகழாய் காட்சிகள். கிராம மனிதர்கள். பெரும் வயல்கள். ரசித்து புகைப்படம் எடுத்து மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். ( கூடவே Toll ஐயும் bypass செய்வது ஒரு Add On ! )



ஒரு முறை இந்த சாலையில் நின்று புகைப்படம் எடுக்கும்போது … அங்கே வந்த ஒருவர் கேட்டார்.
” மழை பெய்யும்போது வாங்க. இன்னமும் நன்றாக இருக்கும். “
” சரி “
” Photo வில மணம் வராது. ஆனா மழை நேரத்தில் இங்கே நேரில் வந்தால் மண் மணம் … அப்படி சுவைக்கும். “
” மணம் சுவைக்கும் ” என்று அவர் சொல்வதில் இருந்து அதன் வீரியம் புரிந்தது.
” சாலைப் பக்கம் போக எனக்குப் பிடிக்காது. ஒரே சத்தம். புகை. வேறு வழியில்லாமல் தான் செல்கிறேன். “
ஆம். அவர் சொல்வது சரிதான்.
” வேறு வழியில்லாமல் ” தான் நிறைய விடயங்களை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.



” நிறைய கோபம் வருகிறது. நினைத்த படி விஷயங்கள் நடக்க மாட்டேன் என்கிறது. என்ன செய்ய வேண்டும் ? “
” கடைசியாக கிராமத்தின் பக்கம் எப்போது சென்றாய் ? ” குரு கேட்டார்.
” சில வருடங்கள் இருக்கும் ” வந்த பெரும் பணக்காரர் சொன்னார்.
” அங்கே சென்று சில வாரங்கள் இருந்துவிட்டு செல். உன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். “


