நான் எனப்படும் நான் : 154
” People create their Own Map about Us. And …They would like to see we Fitting inside their created Maps. Hilarious. “



” நீங்கள் இப்படி இருப்பீர்கள் என்று நினைத்தேன் “
இது தான் பெரும் பிரச்சினைகளின் வேர்க்காரணம். இருப்பதை கவனிப்பது இல்லை. இருக்க வேண்டும் என்று கவனிப்பது !
” நீங்கள் நிறைய பேசுவீர்கள் என்று நினைத்தேன். பேசவேயில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது “
” நீங்கள் அங்கே வருவீர்கள் என்று நினைத்தேன். “
” நீங்கள் கோபப்படுவீர்கள் என்று நினைத்தேன் “
” நீங்கள் கலங்கி விடுவீர்கள் என்று நினைத்தேன் “
நினைத்தேன்.
நினைத்தேன். நினைத்தேன்.
” நினைத்தேன் ” உடன் பேசும் மனிதர்கள் ஏன் பொது வெளிக்கு வர வேண்டும். கண்ணாடியில் பேசிக்கொள்ளலாமே ?



Moral ஆக ஒரு எதிர்பார்ப்பு இருப்பது சரி. ஆனால் அதை செய்தாக வேண்டும் என்பது சரியா ? என்பதே கேள்வி. செய்தே ஆக வேண்டும் என்பது too much. செய்யவில்லை எனில் அவர் அவள் அவன் சரியில்லை என்பது Arrogance.
” அவ்வளவு தான் ” அவர்கள் என்று அவர்களுக்கு நம் நிலையை உணர்த்திவிட்டு ( முடிந்தால் எழுத்தில் ! ) Bye சொல்வது மிக மிக நல்லது. எண்ணத்தில் ஒருவனை ஒருத்தியை மற்றவர்களை அடிமையாக்குவது போல வன்முறை வேறு எதுவும் இல்லை. In fact, நம் எண்ணத்தில் இருந்து மற்றவர்களை Release செய்வது தான் அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவி. அவர்களுக்கு தேவை என்னும்போது நம் எண்ணத்தில் அவர்களை இணைத்து உதவி செய்யலாம். அவ்வளவு தான் அழகான நட்பும் சமூக வாழ்வும்.
கூடவே இழுத்துக்கொண்டு திரிய வேண்டிய அவசியம் இல்லை !



ஒவ்வொருத்தருக்குமான வாழ்க்கை ஒவ்வொருவரின் தனிப் பார்வையில் இருந்து துவங்குகிறது. இந்த உலகின் பெரும் கோடு என்பது இரு மனிதர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான். அங்கே இன்னொருவருக்கு இருக்கும் Space ல் அத்துமீறி நுழைவது தான் முதல் வன்முறை ! அதன் பிறகு அனைத்தும் எண்ண உணர்வு வன்முறைக் களம் !
நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறீர்களா ? நல்லது. ஏன் உடனே அனைவரும் நிறுத்த நினைக்கிறீர்கள் ? உங்களுக்கு ஒரு realization வந்தது போல அவர்களுக்கும் ஒரு காலம் வரும்.
நீங்கள் Diet ல் இருந்தால் அனைவரும் ..
நீங்கள் Walking சென்றால் அனைவரும் …
நீங்கள் படித்தால் அனைவரும் …
இது என்ன மனநிலை ? இதற்கு என்ன பெயர் வைப்பது ?
சாழ்கடல் மனநிலை என்று பெயர் இடலாமா ?
சொல்ல உங்களுக்கு சுதந்திரம் உண்டு.
வற்புறுத்த ? அது கூட பரவாயில்லை.
செய்தால் மட்டுமே ! என்று சொல்ல உங்களுக்கு நமக்கு உரிமை கொடுத்தது யார் ?
யோசிப்போம்.
எண்ண இடைவெளி நல்லது. அங்கே தான் உறவு பூக்கிறது அல்லது புதைக்கப்படுகிறது.


