நான் எனப்படும் நான் : 157
” Do I have to be 100% Right First, before Suggesting someone to do it ?. Certainly not necessary. “







ஆனால் உலகம் ஏன் அப்படி நினைக்கிறது ? அதற்கு பின் இருக்கும் உளவியலை கொஞ்சம் கவனிப்போம்.





இவ்வளவு எல்லாம் யோசிக்கும் நம் உளவியல் .. ஒன்றே ஒன்றை மட்டும் எடுக்க மறுப்பது தான் ஆச்சர்யம்.
” சொல்வது யாராக இருந்தாலும், சொல்வது நம் வாழ்க்கைக்கு சரி எனில் ஏன் எடுத்துக்கொள்ள மனம் மறுக்கிறது ? “
படித்து அனுபவித்து தெரிந்து உணர்ந்து சொல்வது வேறு. அதற்கு
வாழ்த்துகள்
. ஆனால் .. அது சம்பந்தமான படிப்பு / அநுபவம் இருந்தால் மட்டுமே என்று இழுப்பது தான் பிரச்சினை. எத்தனையோ தொழிலாளிகள் பல பிரச்சினைகளை தொழில் நுட்ப வல்லுநர்களை விட அழகாக கையாண்டு இருக்கிறார்கள். அங்கே அவர்களின் ” சொல்வதை ” எடுக்க எது நம்மை தடுக்கிறது ?



மனிதர்கள் சரியாக இருந்தால் மட்டுமே நம்முடன் பேச வேண்டும் என்பது ஏன் ?
நான் உட்பட அப்படி ஒரு மனிதர் உலகத்திலேயே இல்லை. அப்படி எனில் .. யாரும் நமக்கு எதுவும் சொல்லக் கூடாது என்பதே இதன் உட்பொருள்.
” To Err is Human thing ” – தவறுவது மனித இயல்பு. ஒவ்வொரு தவறுக்கு பின்னும் ஆயிரம் Justifications. நமக்கு தவறு என்பது சம்பந்தப்பட்ட மனிதருக்கு சரி என்று இருக்கலாம். இது ஒரு பெரும் Subject. இப்படி தீர்வே இல்லாத ஆனால் .. இது அற்ற ஒரு மனிதர் வேண்டும் .. என்று நினைப்பதே ஓர் illusion.
இந்த illusion ல் வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கே … எனக்கு யாரும் சொல்ல வேண்டாம் – என்கிற தொனி வரும்.
நாம் அப்படியா ? என்று நமக்குள் கேள்வி கேட்கும் நேரம் இப்போது வந்திருக்கிறது என்று உணர ஆரம்பிக்கிறோமா ?



” நான் செய்யும் தவறு உங்களுக்கு தெரிந்திருக்கும். சொல்லுங்கள் குருவே. “
குரு அமைதியாக இருந்தார்.
” நானே நிறைய திருத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் தான் உனக்கு சொல்ல யோசிக்கிறேன் ” குரு சொன்னவுடன் ..
” அதுவரை எல்லாம் பொறுக்க வேண்டியது இல்லை குருவே. நீங்கள் எனக்கு சொல்லுங்கள். நான் திருத்திக்கொள்கிறேன். நீங்களும் உங்களை திருத்திக்கொள்ளுங்கள். இருவரின் திருந்திய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வோம். அதில் நமக்கு புதிய பார்வைகள் கிடைக்க கூடும் “
குரு பேச ஆரம்பித்தார்.


