நான் எனப்படும் நான் : 158
” 90 minutes everyday exercise routine makes sure Healthy life – may be till 90 ! “



என்ன பேசினாலும், எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு உதவிகள் செய்தாலும், என்ன யோசித்தாலும் .. 90 நிமிட உடற்பயிற்சி க்கு ஈடு இணை எதுவுமே இல்லை. வியர்வை வழிய முழுதாய் நனைந்து .. காலைக் காற்றின் வருடலோடு … திரும்ப வீடு வரும் மகிழ்வு தான் பெரும் மகிழ்வு !



90 நிமிடங்களில் உடல் வியர்த்து அன்றைய நாளைக்கு தயாராகிவிடுகிறது. அதிகாலை innovation என்று ஒன்று உண்டு. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் அதிகாலை தனி நடையில் கண்டுபிடிக்கப்பட்டவை தான் ! இன்றும் சில சிந்தனைகள் – நிச்சயம் புதியவை தான். அவற்றின் இயக்கம் இன்னமும் சில நாட்களில் தொழில் சமூக வாழ்க்கையை அடையும். அப்படி தோன்றிய பல கேள்விகளில் சில இங்கே !




இன்னமும் நிறைய …



தனி நடை என்பது காலையில் மிக முக்கியமான ஒன்று. குழு நடைக்கு நான் எதிரி அல்ல. ஆனால் குழு கடைகளில் பெரும்பாலான பேச்சு அரசியல் / தனி நபர் வாழ்க்கை பற்றியே இருக்கிறது !. தனி நடையில் Self Reflection மிக அழகாக நடக்கிறது. ஆழ் மனக் கேள்விகள், பதில்கள், புதிய சிந்தனைகள், நம் தவறுகள் பற்றிய இன்னொரு பார்வை, மன்னிக்க வேண்டியவை, மன்னிப்பு கேட்க வேண்டியவை என்று .. மனம் பல பார்வைகளை கொடுத்து கொண்டே இருக்கும்.
” அது அதுவாக இருக்கும் போது அதன் Productivity யே தனி தான் ! “



” சில பிரச்சினைகளுக்கு எனக்கு பதில் வேண்டும் குருவே “
குரு சொன்னார்.
” உன்னிடம் கேட்டாயா ? “
” எனக்கு தெரியவில்லை என்று தானே உங்களிடம் வருகிறேன் ” என்று சீடன் சொல்ல …
” உன்னிடம் கேள் … பதில் கிடைக்கும் என்று சொல்லத்தான் குரு தேவை. உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க நான் உன் வேலையாள் இல்லை. உனக்கான சிறந்த வேலையாள் நீ மட்டுமே. உன்னிடம் கேள். நிச்சயம் கிடைக்கும். “


