நான் எனப்படும் நான் : 159
” When a Day is filled with Good Memories, “A day Lived well ” History is in the Making “



நேற்று காலை ஆரம்பித்த நீள் பயணம். உடன் பயணித்தது Shankara Narayanan . பல பார்வைகளை நேர்மறையாக விவாதித்த பயணம் இது. சரியாக சொல்ல வேண்டும் எனில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பேசிக்கொண்டு பயணிக்கும் வாய்ப்பு மீண்டும் வந்திருக்கிறது. Covid ன் இந்த அளவு மனசாட்சிக்கு நன்றி.
Phoenix Mall ல் Yamini Sivaram Nivi Mathi யுடன் ஒரு அழகான சந்திப்பு. Zenlp Practitioners ஐ online ல் முடித்த பின் சந்திக்கும் சந்திப்பு. அவர்களின் பின்னூட்டம், கற்றல் அனுபவம், கொஞ்சம் கேள்வி, நிறைய பதில்கள், கொஞ்சம் emotions, நிறைய கிண்டல் என்று அந்த எண்ணப் பரிமாறல் தனது எல்லைகளை விரித்துக் கொண்டே இருந்தது. Yamini – யதார்த்தமினி. உள்ளதை உள்ளபடி சொல்பவர். கேள்விகளின் Queen. நிவி – Counsellor ஆக தயாராகும் அடுத்த பேச்சு ஆளுமை. அதற்கான அடிப்படைகளை புரிந்து கொள்வதில் குறிப்பாக குறியாக இருக்கிறார். இருவருக்கும் SOW அன்பாய் கொடுத்திருக்கிறேன். அதன் ஏதோ ஒரு வரி .. அவர்களை இன்னமும் அழகாய் உயர்த்தட்டும்.
Yamini / Nivi – இருவருக்கும் Shankar தான் நேரடி பயிற்சியாளர். அவர்களுக்கு Shankar அவர்களின் சான்றிதழை வழங்கிய போது … ” தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் ” மனநிலை எனக்கு. நம் கண் முன்னே நம் பயிற்சிகள் ஆளுமைகளாக முன்னேறும் போது மகிழ்வதை விட வேறெப்போது மகிழ்வது ? Kirthika Tharan Anuthama Radhakrishnan Sam Kumar Thinker Sathish Kumar Bhagyaraj Nalli Kavitha Suresh Meena Anilkumar … என்று ஒரு ஆளுமைப் பட்டாளம் காத்திருக்கிறது – தங்களின் யோசிப்பை சமுதாய வளவிற்கு பங்காய் அளிக்க !



Asha Bhagya Raj Rajendra Kumar பகவதி Nalli R கலந்துகொள்ள … அனைவரின் பார்வைகளையும் பரிமாறிக்கொண்ட தருணங்கள் மிக நிறைவானவை. Asha வின் யோசித்தலின் வளர்ச்சியை அருகில் இருந்து கவனித்துக்கொண்டே இருக்கிறேன். தன்னைக் கேள்வி கேட்பவர்கள் வளர்வார்கள். ஆஷா தன்னை கேள்வி கேட்பவர். தன்னைக் கேள்வி கேட்பதால் பிறருக்கு நேர்மறையாகச் செய்யும் support ன் அளவை இன்னமும் அழகாக மாற்ற நினைப்பவர். வரும் காலங்களில் இவரின் உயரத்தை நாம் ” பார்க்கத்தான் போகிறோம் “.



Rajendra kumar – Covid சமயத்தில் இன்னமும் அவர் எனக்கு phone செய்து பேசியது ஞாபகத்தில் இருக்கிறது. அங்கே ஆரம்பித்த இந்த உறவு அழகாய் நீண்டு கொண்டே இருக்கிறது. இத்துணை சவால்களை Covid கொடுத்தாலும் … இன்னமும் சிரித்த வண்ணம் முன்னேறுகிறார். ” அனைத்தையும் சந்திப்போம் – அவ்வளவு தான் வாழ்க்கை ! ” என்கிறார். அவரின் வியாபார தளம் நோக்கி அடுத்த முறை சென்று பார்க்க வேண்டும். அவரின் வளர்ச்சி அவரது தொழிலாளர்களின் வளர்ச்சி.
அவரின் அடுத்த தலைமுறை நம்பிக்கை பகவதி இப்படியான சந்திப்புகளை அருகில் இருந்து கவனிப்பது தான் வரம். அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது எதுவும் இல்லை. அவர்களை நாம் சிந்திக்கும் பேசும் நடந்துகொள்ளும் விதத்தை கவனிக்க வைத்தால் போதும் ! நம் கனவின் மீத வளர்வை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.



சந்திப்பு முடிந்து வீட்டுக்கு வந்தால் … Asha வின் இரு குழந்தைகளும் .. Ground Floor ல் வந்து நின்று ” Uncle வீட்டுக்கு போலாம் ” என்று குதிக்கின்றன. சின்ன ஆளுமை வளர்ந்திருக்கிறது. பெரிய ஆளுமை பாக்யராஜ் போலவே சிரிக்கிறார். Active ஆக இருக்கிறார். ” Uncle சின்னதா ஒரு car drive போலாமா ? ” என்று கேட்கும் பெரிய ஆளுமையை அடுத்த முறை ஒரு நீண்ட drive ஒன்றுக்கு கூட்டி செல்ல வேண்டும். அந்த இரு ஆளுமைகளும் என்னை பார்த்து சிரிக்கும் அந்த புகைப்படத்தை கவனித்தால் “நான் முழுமையாக இருப்பதை ” உணரலாம். முழுமைத்துவம் குழந்தைகளிடம் மட்டுமே கிடைக்கும்.



நல்லி யின் வீட்டில் இரு ஆளுமைகள் – Sridhar Rethinam மற்றும் நல்லியின் அம்மா. அம்மாவிற்கு என்னை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. அவர்களின் மகிழ்வை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி ! கையை பிடித்துக் கொண்டு அவர் மகிழ்த்ததை மீண்டும் நினைத்து பார்க்கிறேன். அப்படியான மகிழ்வை Kamala Mami Parvathy Kalyanaraman Kalavathi Vengatesan அவர்களிடம் எப்போதும் நான் பார்ப்பது உண்டு. ( ஆம். எம் குடும்பம் மிகப் பெரியது ! )



கடைசியாக நாள் முழுதும் பொறுமையாய் புரிந்து காத்திருந்த தங்கை மாப்பிள்ளை மற்றும் மருமகள்களை சந்தித்தால் நாள் நிறைவாய் நிறைந்து முடிகிறது. வாசலில் காத்திருந்த மருமகள் ” வா வீட்டுக்கு போலாம் ” என்று சொல்லும் போது .. என்னவோ ஒரு நெகிழ் அழுத்தம் உள்ளே ! இரண்டு மருமகள்களும் என்னிடம் விளையாட .. அதை மகிழ்வாய் பார்க்கும் தங்கை மாப்பிள்ளை .. என்று … குடும்ப வாழ்க்கை இனிது இனிது.



இன்னும் சிறிது நேரத்தில் முதல் தங்கை / மாப்பிள்ளை / மருமகன் / மருமகள் .. அனைவரையும் பார்க்கவிருக்கிறேன். ” மாமா இங்கே வரலையா ? ” என்று நேற்று இரவே மூன்று முறை மருமகனார் கேட்டுவிட்டார் இன்று மதியம் வரை என்னுடன் நேரம் செலவழிக்க அவர் already திட்டங்களோடு காத்திருக்கிறார்.
அவரின் திட்டத்தில் நான் ஓர் எடுபிடி. சொல்வதை செய்ய வேண்டும். அவ்வளவு தான் என் role !



சென்னை மீண்டும் Traffic உடன் மூச்சு விட ஆரம்பித்து இருக்கிறது. Traffic உடன் சென்னையை பார்த்தால், அதில் உழலும் மக்களின் முக நம்பிக்கையை பார்த்தால் .. Covid நாட்கள் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்வது புரிகிறது. இன்னமும் சவால்கள் இருப்பினும் .. நாடுகள் நகரங்கள் “இதற்கு மேல் உனக்கு அனுமதி இல்லை ” என்றே இயங்க தொடங்கி இருக்கின்றன.
ஒரு பெரும் “பரபரப்பு நிறை வருடங்களுக்கு ” நான் தயாராவது எனக்குள் புரிகிறது. ஆம். சமூகத்திற்கு தன் இயக்கத்தில் .. நிறைய வலி, காயம், கேள்வி, கோபம் … இருக்கிறது. அவற்றிற்கு சிலரால் மட்டுமே பதில் சொல்ல மருந்திட கைகொடுத்து உடன் பயணிக்க … முடியும். அப்படியான பயணத்தில் நானும் இருக்கிறேன் என்று நினைப்பதில் மகிழ்வு.
ஓர் பெரும் பொறுப்பு Zenlp Academy க்கு காத்திருக்கிறது. அந்த பொறுப்புடன் இந்த academy இயங்க ஆரம்பிக்கும் – எனக்கு பிறகும் !


