நான் எனப்படும் நான் : 160
” When Early Morning becomes completely Ours, We have a Super Day waiting ahead “



எந்த ஊருக்கு சென்றாலும் அதிகாலை 10K வுக்கு. ஒவ்வொரு ஊரிலும் ஒரு Special Location இருக்கும். கோவையில் Race Course !
Shoe வை அணிந்து ஓட ஆரம்பிக்கும் போது Alarm அடிக்கிறது. ஆம். வருட 365 நாட்களில் 95 சதவிகிதம் நான் முதலில் எழுந்து என் வேலைகளை செய்துகொண்டு இருக்கும்போது Alarm அடிக்கும். நான் முதலில் என் நேர்மறைச் சிரிப்பை ஆரம்பிப்பது Alarm உடன் தான் !
” Start with a Smile to End the day with Big Laughter “



Color Lights அணிந்து கொண்டு Race Course ஆற்றலுடன் வரவேற்கிறது. ஆங்காங்கே selfi எடுக்கும் சிறு சிறு Counters. ஒரு அழகான ஊஞ்சல். அதில் இரு நடுத்தர வயது பெண்கள் சிரித்த வண்ணம் – ஆம் – அதிகாலை 05 மணி அளவில் ! சிரிக்கும் மனிதர்கள் அழகு. அதிலும் உடற்பயிற்சியின் போது சிரிக்கும் மனிதர்கள் மிக அழகும் வசீகரமும் நிறை கலவை !
” அவரே புத்திசாலியா இருக்கட்டும். நாம முட்டாளேவே இருப்போம் “
என்று இருவரும் சிரித்த போது யாரோ ஒரு கணவனுக்கு இன்று ” இருக்கிறது மவனே உனக்கு ” என்றே எனக்கும் தோன்றியது. நானும் சிரித்த போது அந்த இருவரில் ஒரு பெண் அதை கவனித்து விட்டு சொன்னார் …
” சார் .. நாங்க முட்டாள் ன்றது உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா ? “
என்று சிரித்துக்கொண்டே கேட்க
” நானும் தான் “
என்று நான் சொல்ல .. மூவரும் சிரிக்க .. அந்த பக்கமாய் நடந்தவர்களும் சேர்ந்து சிரிக்க .. அது ஒரு ஹைக்கூ சிரிப்பு தருணமாகியது ! என்ன ஒரு நாள் ஆரம்பம் இது !
” Accept Your Foolishness and Smile. Enjoy lighter side of Life as well “



Doctor படத்தின் ” செல்லம்மா செல்லம்மா “தான் இன்று உடன் பயணித்த Song. என்னவோ ஒரு Energy இந்த பாட்டில் !
” கண்ணால் வலையை வீசி
என்னை தூக்கும்மா ..
Lifetime settlement தானம்மா “
என்ற வரிகளை ரசித்துக்கொண்டே காலைத் தென்றல் உடன் வர .. செடிகளின் வாசத்துடன் .. ஒடும்போதே இரண்டு steps பாட்டுக்கும் போட்டுக் கொண்டே ஓடுவது எல்லாம் .. அதிகாலை மனிதர்களுக்கு மட்டும் தெரிந்த மகிழ் கலை !
” Just be with the Song you like and Become a Virtual Singer. If so, We will realize the Song’s Beautiful Moments “


