நான் எனப்படும் நான் : 161
” Meeting People again – Face to Face ! “



Pandemic காலத்தில் Online ல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அதி தீவிரமாக வகுப்புகள். அதற்கு முன் Online வகுப்புகள் எடுத்து இருந்தாலும் … இவ்வளவு அதிகமாக இல்லை. அதிருக்கட்டும் .. இப்போது மகிழ்வான செய்திக்கு வருவோம். ஆம். எனக்கு மிக பிடித்த, நான் விரும்பும், ரசிக்கும், நேரடி வகுப்புகள் ஆரம்பமாகின்றன. ஆளுமைகளை கண்ணோடு கண் பார்த்து, அவர்கள் யோசிக்கும் பேசும் நடந்துகொள்ளும் விதத்தினை கவனிப்பது .. தான் யதார்த்தம். சிறிய செவ்வக Window ல் online ல் பார்ப்பது எல்லாம் Altered. Image மட்டுமே !



இந்த இரண்டு வருடங்களில் online ல் மட்டுமே என் வகுப்புகளை சந்தித்து கடந்து சென்றவர்களை நினைத்து பார்க்கிறேன். அவர்கள் பெற்றது அதிகமாக இருக்கலாம். ஆனாலும் … அவர்கள் இழந்திருப்பது மிக அதிகம். நேரடி வகுப்புகளில் ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு வார்த்தை, ஒரே ஒரு வரி, ஒரு கதை, ஒரு activity, ஒரு மௌனம், ஒரு வார்த்தை வீச்சு பலவற்றை கற்றுக்கொடுத்துவிடும். Online ல் அப்படி அல்ல. Overseas இல் இருப்பவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதால், பயணம் செய்ய முடியா பெண் ஆண் ஆளுமைகளுக்கு .. வேறு வழி இல்லை என்பதால் online வகுப்புகள் ok. ஆனால் .. நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு இருப்பின் …நிச்சயம் நேரடி வகுப்புகளே முதன்மை விருப்பம்.



” Online ல் மட்டுமே இருந்திருந்தால் நிறைய இழந்திருப்பேன். நல்ல வேளை .. நேரில் சந்தித்து வகுப்புகளை பெற்று விட்டேன். “
” நேர்ல வேற ஜெய். சிறிய இரண்டு நிமிட பேச்சு, கேள்வி, பதில், உரையாடல் …அனைத்தையும் மாற்றி விடுகிறது. நன்றி “
பின்னூட்டங்கள் மனதை நிறைக்கின்றன. அதே நேரத்தில் …online ல் முடித்து, இன்னமும் என்னுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு நேரடியாக ஒரு Session செய்ய திட்டம் இட்டிருக்கிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கும் நேரம் வரவிருக்கிறது. உங்களிடம் இருந்தும் கற்க வேண்டியது இருக்கிறது.
சந்திப்போம். பயணிப்போம்.


