நான் எனப்படும் நான் : 163
” A Single Visual is Capable of … “



தேசிய நெடுஞ்சாலை என்பது ஒரு நாகரீக தீண்டாமை என்பதை நம்மில் எத்தனை பேர் யோசிக்கிறோம் ? கிராமங்கள் நம் கண்ணில் பட்டுவிடவே கூடாது என்பது போன்றே அது உருவாக்கப்பட்டதோ என்று எனக்கு சமயத்தில் தோன்றும். வேகத்திற்கும் வசதிக்கும் தேசிய நெடுஞ்சாலை மிக அவசியம் என்பதை நாம் உணர வேண்டியது எனக்கு புரிகிறது. ஆனால் கூடவே … எதில் இருந்து நாம் விலகுகிறோம் என்பதும் இங்கே மிக முக்கியமான ஒன்று !
” ‘ Its not about you. Its about My convenience. ‘ -. Is the most untouchable of all ! “



நாம் ஏன் வாகனங்களை வேகமாக ஓட்டுகிறோம் ?
1. சாலையில் எந்த இடையூறும் இல்லை
2. சாலை வசதியாக இருக்கிறது
3. சாலையில் குறுக்கே யாரும் வருவது இல்லை வரப்போவது இல்லை
எனக்கு வசதியாக இருக்க வேண்டும், எனக்கு இடையூறு இருக்க கூடாது மற்றும் யாரும் என் வழியில் வரக்கூடாது மனநிலை தான் இது ! பல வசதிகளை வைத்து இதற்கு நாம் yes சொல்வது சரி. ஆனால் கிராமங்களில் இருந்து விலகுவது சரியா ? சாலை சரியில்லாத, இடையூறு இருக்கும், குறுக்கே மனிதர்கள் வரும் சாலைகளில் கடைசியாக நாம் பயணித்தது எப்போது ? அப்படி பயணித்த போது கிடைத்த ஒரு காட்சி தான் இங்கே புகைப்படமாக !
” ‘This is Good’ is fine.
‘This only is Good is’ . .. the Danger “



காலையில் வீட்டின் வாசலை சுத்தம் செய்யும் பெண், மகளுடன் விளையாடும் ஆண், தேநீர்க் கடை திறக்கும் முதல் தொழிலாளி, குளத்தில் குளிக்கும் ஊர் மக்கள், மிதிவண்டியில் தன் வேலைக்காக பயணம் செய்யும் முதியவர் … என்று ஒரு உலகம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு கிராம சாலையில் நடந்துகொண்டே இருக்கிறது. இதை குழந்தைகளுக்கு காண்பிக்காத போது அவன் அவள் எப்படி கிராமத்தை விரும்புவான் ? விரும்புவாள் ? அவன் அவளுக்கு கிராமம் என்பது … சினிமா வில் மட்டுமே. செயற்கையான கிராமம் என்பதை காட்டுவதை விட கொடுமை ஏதாவது உண்டா ? இது சரியா ?



ஓரே ஒரு புகைப்படம் நம்மை எவ்வளவு யோசிக்க வைக்கிறது … !


