நான் எனப்படும் நான் : 168
” There is a Daughter everywhere, If We become a Father inside our Minds “



சிவகங்கை வந்தால் Jawahar Krishnan வீடு எனக்கு இன்னொரு ” என் அம்மா ” வீடு. அவரின் அன்பான கவனிப்பு மிக முக்கியமான ஒன்று. அதிலும் ….Green Tea, Omelette, Badam, காய்கறி பொரியல் … என்று எனக்கான Diet உடன் பரிமாறுவதால் …மனம் மிக மிக இலயிக்கும் ஓர் வீடு அவருடையது.
இந்த முறை ஆர்த்தி – யின் Omelette Making Special. இவ்வளவு சுவையான கலவையாக நான் Omelette சாப்பிட்டது இல்லை. ( இதற்கு இணையாக என்று வைபவ் செய்யும் Omelette ஐ சொல்லலாம். Anuthama Radhakrishnan Shankara Narayanan ). காய்கறி அதிகம் சேர்த்து, அழகான கலவையாக செய்யப்பட்ட இந்த Omelette ஓர் உணவு மிக மிக போதும் – ஒரு நாளைக்கு !
எதிர்கால IAS நோக்கி பயணிக்கிறார் ஆர்த்தி. இலக்கில் தெளிவாக இருக்கிறார். இந்த வயதிற்கு உண்டான கவனச் சிதறல்கள் அவரிடம் இல்லை. படிப்பு, திறமை வளர்த்தல், கற்றல் மற்றும் Omelette Making ல் மட்டுமே கவனம் ! ( 
). இந்தக் கால இளைஞர்களின் கவனச்சிதறல் எதுவும் அவரிடம் இல்லை. நோக்கம் முழுக்க IAS மட்டுமே. நிச்சயம் அடைவார்.


Jawahar வீடு – பற்றி இங்கே சொல்ல வேண்டும். அமைதியான வீடு. தோட்டம் ஒன்று அழகாய். ஏன் ” ஆனந்த பவனம் ” என்று பெயர் வைத்தீர்கள் என்று கேட்டால் சொல்லும் விளக்கம் அழகான ஒன்று. வாசலில் கபாலி என்னும் Labrador கம்பீரமாக நிற்கிறது. எண்ணம் சரியில்லை எனில் ” லபக் ” தான் !
சிவகங்கை வந்தால் Kumar Thinker வீடு ஒரு ” என் அம்மா ” வீடு எனில் Jawahar சாரின் வீடு இன்னொரு ” என் அம்மா ” வீடு. இன்று Nalli R Sridhar Rethinam Sam VVijaya …மற்றும் Zenlp Trainers அனைவரும் இங்கே சந்தித்து காலை உணவு எடுத்த தருணம் இன்னமும் நினைவில். நல் நினைவுகளை தவிர என்ன கொண்டு செல்லப் போகிறோம் ?
சிவகங்கையில் இருந்து பயணம் மீண்டும் துவங்குகிறது !


