நான் எனப்படும் நான் : 169
” When we belong to a Family we can make Huge Difference to that Family “



Kumar Thinker ன் புத்தகம் சுதந்திரமாய் உலகை சுவாசிக்க முன் வந்த நாளில் சிவகங்கையில் அந்த Function ல் கலந்து கொண்டு … நிகழ்வுகளில் எம்மை யாம் ஈடுபடுத்திக்கொண்ட போதான ஒரு தருணத்தில் … ! புகைப்படம் எடுத்த Sam அவருக்கு நன்றி.
தங்கைகளின் திருமணம், வளைகாப்பு போன்ற நிகழ்வுகளில் சுற்றி வரும் Jay தான் இங்கேயும். குமார் இந்த புத்தகத்திற்காக எவ்வளவு அலைந்து திரிந்தார் என்பதை நான் அருகில் இருந்து உணர்ந்து இருக்கிறேன். AC அறையில் உட்கார்ந்து அந்த புத்தகத்தை அவர் எழுதவில்லை. கற்பனையில் எழுதவில்லை. தன் வார்த்தை ஜாலங்களை காண்பித்து எழுதவில்லை. கடையம் முதல் காசி வரை பயணித்து, சுவாசித்து, கண்டு, கேட்டு, உண்டு, உணர்ந்து, ரசித்து அப்படியே யதார்த்த தமிழில் எழுதிய புத்தகம் அது. அப்படியான ஒரு விழாவில் சாப்பாட்டு பரிமாறலில் நம் பங்கும் இருக்க வேண்டும் .. இல்லையா ?
நட்புக்கு என்று சில அடையாளங்கள் உண்டு.








இப்படியெல்லாம் இல்லாது … வெறும் சிரிப்பும் கிண்டலுமாக இருப்பது நட்பு அல்ல. பொழுதுபோக்கு !



வேட்டியை மடிச்சு கட்டி .. இங்கும் அங்குமாய் நகர்ந்து உதவி செய்வது என்பது ஒரு தனி மனித பெருமிதம். அனைத்து நிகழ்வுகளிலும் நாம் இதை செய்வது இல்லை. மனதிற்கு நெருக்கமாக உணரும் உணர்வில் மட்டுமே செய்கிறோம். அப்படியான ஒரு பெருமித உணர்வில் முகம் கொஞ்சம் அதிகமாகவே சிரிக்கிறது. மிளிர்கிறது.



பயணிப்போம்.