படம் சொல்லும் பாடம் – 048
” When The Best Ever Challenge comes, It Provokes you to be Best ! So .. Be the Best “



Germany தன் போரை intensive ஆக மாற்றும் அதே நாளில் Churchill தலைமை அமைச்சர் பதவியை ஏற்கிறார். அங்கே இருந்து அவர் எடுக்கும் முடிவுகள், பயணங்கள், சந்திப்புகள், அடுத்த தேர்தல் முடிவு .. வரையான கதை ! நிமிடத்துக்கு நிமிடம் அந்த பிரதம அமைச்சர் நம்மை வசப்படுத்துகிறார். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னமும் நிறைய – என்று நமக்குள் நிறைய கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் ஒரு அழகான படம் !
பிரதம அமைச்சர் என்ற பகட்டு எல்லாம் இல்லாது … தினசரி Schedule ஐ வாசிக்கும் உதவியாளரிடம் ..
” சாப்பிட்டதும் நான் கொஞ்ச நேரம் தூங்குவேன். அது எங்கே காணோம் ?. அப்படி தூங்கினால் தான் நான் நன்றாக யோசிக்க முடியும் ” என்று சொல்வதில் ஆரம்பிக்கிறது – எந்த முலாமும் பூசாத ஒரு தலைமை யின் அழகு !
” என் முன்னால் நிற்க உனக்கு படபடப்பாக இருக்கிறதா ? ” என்று முன்னாள் இராணுவ வீரரிடம் கேட்கும் போது அவரின் ” ஆம் ” பதிலை பெற்றுவிட்டு ..
” இந்த நாட்டிற்காக பெரும் தியாகம் செய்திருக்கும் உன் முன்னால் நிற்க எனக்கும் அப்படித்தான் இருக்கிறது ” என்று சொல்லும்போது அவருக்குள் இருக்கும் தலைவர் வெளியே வருகிறார்.
” இது அனைத்து கட்சிகளுக்குமான நேரம். அனைவரும் சேர்ந்து போரை எதிர்கொள்வோம் ” என்று ஒரு Stroke ல் அனைத்து கட்சிகளையும் ஒரு பக்கம் கொண்டுவருவதும், ஒரே புகைப்படத்தில் அனைவரையும் அமரவைப்பதுமாக …செய்யும் போது அரசியல் சாணக்கியம் வெளியே வருகிறது.
மனைவியிடம் சண்டை போடுவது, பின் அவர் சொல்வதை கேட்பது, பின்னர் அவரின் உடன் அமைதியாக நடப்பது .. என்று ஒரு யதார்த்த வாழ்வை வாழ்ந்திருக்கும் மனித ஆளுமை தான் Churchill.
நடிப்பு என்றால் என்ன என்று கற்று தரும் நடிப்பு ! அப்படியே Churchill ஆக வாழ்ந்து இருக்கும் மனிதருக்கு
வாழ்த்துக்கள்
. கிட்டத்தட்ட Churchill உடன் பயணித்த அனுபவம் நமக்கு. தன்னை பிரதம அமைச்சர் ஆக தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்படும்போது அவர் அமர்ந்து இருக்கும் அந்த ஒற்றை Behavior போதும் .. மனிதர் அசத்தி இருக்கிறார். காட்சி அமைப்புகள், வசனங்கள் அனைத்தும் நம்மை அந்த காலத்திற்கே கொண்டு செல்கின்றன.
இவ்வளவும் செய்து தேர்தலில் மக்கள் தரும் முடிவை ஏற்க முடியாது ஆனால் ஏற்கும்போது … மனிதர் நமக்குள் ஒரு பரிவை கொண்டுவருகிறார். ” அதுதான் ஜனநாயகம் ” என்று அவர் மனைவியுடன் நடக்கும்போது .. நமக்குள் என்னவோ எதையோ இழந்ததை போலவே இருக்கிறது. நல்ல எண்ணங்கள் நிகழ்காலங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. பல இழப்புகளுக்கு பின் எதிர்காலத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன !
மொழி ஆளுமை, முடிவெடுக்கும் திறன், பேச்சு இலாவகம், யதார்த்த வாழ்க்கை … என்று ஒரு பெரும் பாடத்தை இந்த படம் நமக்கு நடத்துகிறது. படம் பார்த்து கற்பவர்கள் நிறைய பெற்றவர்கள்.


