படம் சொல்லும் பாடம் – 049
” Emotions are Treasures. If We Know How to Handle those Invisible Internal Frequencies ! “



முதல் காட்சியில் அடங்கும் குதிரை.
அடுத்த காட்சியில் அடங்க மறுக்கும் மனிதன்.
மூன்றாம் காட்சி. கைதி. சிறைச்சாலை. குதிரைகள் இருக்கும் இடம். ஒரு குதிரை மட்டும் அடங்க மறுக்காமல் தனித்து !
நான்காம் காட்சி – தன்னை காண வந்திருக்கும் பெண் – கேட்கும் கையெழுத்தை உடனே போட்டு விட்டு ” இனிமேல் இங்கே வராதே ” என்று சொல்லிவிட்டு செல்லும் அதே கைதி – அடங்க மறுக்கும் மனிதன் !
படம் இனிதே ஆரம்பம் !



உணர்வுகளை சரியாக கையாளத் தெரியாத மனிதர்களுக்கு ஒரு Rehabilitation Program – என்ன அது ? – குதிரைகளை பழக்குவது அல்லது அடக்குவது !
” If you want to control your horse, First you have to control yourself “
என்று கன்னத்தில் அறையும் வரிகள் ஆங்காங்கே படம் முழுக்க !
” What You Know about Taking Care of Anything ? “
என்று மற்றுமொரு வரி.



குதிரையை அடக்க சொன்னால் அதனுடன் சண்டையோடு ஆரம்பிக்கும் அந்தக் காட்சி தான் படத்தின் ஆரம்பப் புள்ளி. குதிரையை அடக்க அல்லது வழிக்கு கொண்டுவர வேண்டும் எனில் … அதைப்பற்றி படிக்க வேண்டும் ! அதற்கான Magazine வாங்கி, படித்து … குதிரையை பழக்க .. orange வண்ண உடை கைதிக்கு நீல வண்ண உடை முன்னேற்றம் !
” First Name it, If you want to Bring it to Your Control “
சின்னச்சின்ன வரிகள். ஆனால் ஆழமான அர்த்தம். குதிரையை வசப்படுத்த வசப்படுத்த .. காட்சிகள் அழகாவது தான் படத்தின் அழகு ! முதன் முதலாக தோளில் சாயும் குதிரையை கலங்கிய கண்களுடன் பார்க்கும் கைதி .. என்று ஒரு உணர்வுத் தொடர் நிறை காட்சி நம்மை என்னவோ செய்வது உறுதி !.



குதிரையுடனான மனிதப் புரிதலில் இவ்வளவு மென் உணர்வுகள் இருக்கிறதா என்ற ஆச்சர்ய காட்சிகள்.
இவ்வளவுக்கும் இடையில் Anger Management வகுப்புகள். Emotionally Imbalanced ஆக இருக்கும் மனிதனை எப்படி எல்லாம் நேர்வழிப்படுத்த அரசாங்கம் முயற்சிகள் எடுக்கின்றன !?
” எவ்வளவு வருடமாக சிறையில் இருக்கிறாய் ? “
” 12 வருடம் “
” எவ்வளவு நேரத்தில் உன் தவறு நடந்தது ? “
” Split Second “
என்ன ஒரு ஆழம் இந்தக் கேள்வியில் ! பதிலில் !!



நடிப்புக்கும் மேலே ஏதாவது ஒன்று இருக்கிறதா – யதார்த்த நடிப்பை சொல்ல ? அப்படி ஒரு நடிப்பு. அப்பா / கைதி / குதிரையை அடக்குபவன் / தன் Emotions ஐ அடக்குபவன் .. எவ்வளவு மென் உணர்வு காட்சிகள் ! அசத்தும் நடிப்பு கைதியுடயது !
விற்கப்படும் குதிரைகளுக்கும் Train செய்த கைதிக்கும் இடையிலான உணர்வு .. அந்தக் குதிரை விற்கப்பட்டு வெளிக்கிளம்பும் போது அதை Train செய்த கைதிக்கும் … நமக்கும் புரிய வருவது தான் படத்தின் Success !
குதிரைகளை பழக்கிய பின் .. சிறைவாசம் முடிந்து வெளிவரும் கைதிகள் .. குற்றங்கள் செய்வது இல்லை என்பது மட்டும் இல்லை .. சிறப்பாக வாழவும் முயற்சிக்கின்றனர் என்பது இந்த சினிமா நமக்கு Suttle ஆக சொல்லும் வாழ்க்கைப் பாடம் !


