படம் சொல்லும் பாடம் – 052
” Life throws Challenges with Only One Choice … “Take It & Face it ” ! “
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது நம்மை முடக்கி போட்டு விடும் அளவிற்கு ஒரு உடல் சார் பிரச்சினை வருகிறது. இரு கால்களும் இயங்க முடியா போலியோ அது ! அங்கே இருந்து நாம் என்ன செய்வோம் ?.
முதலில் அதிர்வோம்.
பின் ? கோபப்படுவோம்.
பின் ? எதிர்மறை மனநிலையை அடைவோம்.
பின் ? … அதுதான் படம் !
அந்த மனிதர் அமெரிக்காவின் எண்ண ஓட்டத்தை மாற்றும் முக்கிய பொறுப்பை அடைவது தான் படத்தின் ஆச்சர்யம்.
” Not Yet ” இந்த வார்த்தையின் Power என்னவென்று தெரிய வேண்டுமா ?
நீச்சல் குளத்தை நிர்வகிக்கும் ஒரு வயதான பெண்மணியின் … அந்த ” Not Yet ” வாழ்க்கையை திருப்பி போடும் அளவிற்கு சக்தியானது என்று நமக்கு படம் பார்க்கும்போது புரிய வரும் !
நமக்கு புரிவதற்காக உதாரணத்திற்கு …
” Are You Ready for Death ? “
” Not Yet “
மனைவியுடன் பேசும்போது கணவர் சொல்லும் …
” Speak to me as I was, Not as I am “
என்கிற ஒற்றை வார்த்தையில் அனைத்து வலிகளும் அற்புதமாக கடத்தப்படும் அழகு தான் இந்தப் படம். நாம் அல்லது நமது நட்பு வட்டம் அல்லது நமது உறவினர்கள் … உடலால் அவதிப்படும்போது நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது !
” இடுப்புக்கு கீழே மட்டுமே அவர்கள் என்னை பார்க்கிறார்கள் ” என்ற வார்த்தைக்கு ..
” உன் இடுப்புக்கு கீழ் நீ பார்க்கும் வரை அவர்களும் அங்கே தான் பார்ப்பார்கள் “என்கிற பதில் நமக்குள் என்னவோ செய்கிறது ! நமக்குள் ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
” மக்கள் நம்மை அப்படி பார்க்கிறார்களா ? இல்லை … அப்படி பார்ப்பதாக நினைத்து நாம் நம்மை அப்படி பார்த்துக்கொண்டு இருக்கிறோமா ? “
கேள்விகள் எப்போதும் புதிர் அல்ல. அவை நமக்குள் எழுப்பும் அலை அலையான பதில்கள் தான் புதிர்கள் ! கொத்து கொத்தாக கேள்விகள் நம்முள் எறியப்பட …அவற்றை ஆழமாக நட்டுக்கொண்டே செல்ல வேண்டியதை நாம் செய்தால் .. நம் Unconscious நமக்கான பதில்களை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கும். அப்படி படங்கள் கிடைப்பது அரிது. பார்த்து விட வேண்டியது அவரவர் பொறுப்பு !
இப்படியெல்லாம் கூட நடிக்க முடியும் என்று நிமிடத்திற்கு நிமிடம் பாடம் நடத்தும் நடிப்பு ! போலியோ தரும் இயலாமை உணர்வுகளை .. இடுப்புக்கு மேல் கொண்டு வர … என்ன மாதிரியான பயிற்சிகளை எடுத்திருக்க வேண்டும் ! சில படங்களை நாம் பார்த்த பின் .. அதற்கு முந்தைய படங்களின் நடிப்பை நாம் மறக்க வேண்டி வரும். அப்படியான படம் ஒன்றை பார்த்த நிறைவு மனதிற்குள் எழும்போது .. சட்டென படம் முடிந்து போவது .. கவிதையிலும் கவிதை !





