படம் சொல்லும் பாடம் – 050
” Society is a Witness, Not a Decision Maker “
” கடவுளிடம் என்னை முழுமையாக கொடுத்தேன். அவர் இந்தப் பிரபஞ்சத்தில் எனக்கும் ஒரு இடம் கொடுத்தார் “
என்கிற பாடலை சரியாக பாடாததால் வகுப்பிற்கு வெளியே அனுப்பப்படும் குழந்தை வானத்தை பார்ப்பதோடு ஆரம்பிக்கிறது படம் ! அங்கேயே நமக்கும் ஒரு தகவல் அந்தக் காட்சி வாயிலாக சொல்லப்பட்டு விடுகிறது
தன்னிடம் Cycle ல் வந்து வம்பு இழுக்கும் மாணவனிடம் …
” என்னிடம் ஒரு Cycle இருந்தால் தெரியும் ” என்று சொல்லும் பதில் தான் படம்.
” பெண்கள் இங்கே Cycle ஓட்ட முடியாது என்று தெரியாதா ? “
என்று கேட்கும் மாணவனிடம் ..
” பெண்களிடம் தோற்பது அசிங்கமாகத்தான் இருக்கும் “
என்கிற பதிலில் நமக்குள் எழும் பல கேள்விகள். உண்மையிலேயே பெண்களை ” சிலவற்றை ” செய்யக்கூடாது என்று வைத்திருப்பது .. அவர்களிடம் ஆண்கள் தோற்றுவிடக்கூடும் என்பதாலா ?
” Face ஐ Cover செய் ” என்று சொல்லும் ஒரு நாட்டில் .. அப்படி Cover செய்யாது சுற்றும் ஒரு பள்ளி மாணவி. பெண்கள் Cycle ஒட்டக்கூடாது என்று சொல்லும் நாட்டில் .. Cycle ஐ வாங்குவதற்கு எப்படியும் எதை செய்தாவது பணம் சேர்க்க நினைக்கும் அதே பள்ளி மாணவி …. பெண்களை பற்றி ஒரு புறம் புனிதமாக பேசி, ஆனால் இன்னொரு புறம் அவர்களின் மேல் நிகழும் அடக்குமுறை .. முரண்பாடுகளை suttle ஆக சொல்லிக்கொண்டே இருக்கிறது காட்சிகள் !
” இறைவனுக்காக இறந்தால் மேல் உலகம் சென்று 70 பேரை மணந்து கொள்ளலாம் ” என்று சிறு பையன் சொல்லும்போது மனம் பதைக்கிறது. நாம் வாழும் வாழ்க்கை அவர்களின் எண்ணங்களில் என்ன ஒரு Negative பாதிப்பை ஏற்படுத்துக்கிறது !!
Magazines படிப்பது ஒரு Sin. ஆண்களை நேராக பார்ப்பது ஒரு Sin. முகத்தை மூடாது இருப்பது Sin. Cycle Bike பெண் ஓட்டுவது Sin. ஆண்களுடன் வேலை பார்ப்பது Sin. இவை அனைத்தும் குழந்தைகளின் கண்ணில் காதில் உணர்வில் விழுந்துகொண்டே இருக்கும் Sins. பேசுவது ஆண்கள் காதில் விழுந்தால் Sin. Family Tree யில் ஆண்கள் பெயர் மட்டுமே வருவது Sin அல்ல …பெண்கள் பெயர் வந்தால் Sin ! – Oops.
குர்ரான் சொல்லும் போட்டியில் … வெற்றி பெற்ற பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறாய் ? என்கிற கேள்விக்கு அந்தப்பெண் சொல்லும் பதிலும், அதற்கு பின் நடக்கும் நிகழ்வுகளும் … ஒரு Belief நம்மை என்னவெல்லாம் செய்யும் என்று யோசிக்க வைக்கிறது.
சின்னப் பெண் தான். ஆனால் அப்படி ஒரு முதிர்ச்சி நடிப்பில், முகத்தில் ! இந்த சமூகத்தின் ஒவ்வொரு பக்க பெண்களும் பேசுவதை அந்தப் பெண் கவனிக்கும் விதமே அப்படி ஒரு அழகு. குர்ரான் படிக்கும் போது தன் மனதிற்கு சரி வராத வரிகளை படிக்காமல் நிறுத்துவது … Cycle க்காக பேரம் பேசுவது .. அம்மா அப்பாவுடன் பேசும் வரிகளை கவனித்து சிரிப்பது … என்று ஒரு நடிப்பு பயிற்சியையே நடத்திக்காட்டியிருக்கிறார். வரும் காலங்களில் பெரும் நடிப்பை கொடுக்கக்கூடிய ஆளுமையாக வருவார் என்றே தோன்றுகிறது. குறிப்பாக அப்பாவின் இரண்டாம் திருமணம் பற்றி அம்மா பேசும்போது காண்பிக்கும் முக பாவனைகள். கூடவே நடிக்கும் அப்துல்லாஹ் இன்னோரு நடிப்பு திறமை. அப்துல்லாஹ் கேட்கும் கேள்வியில் மனம் இலயிக்கிறது.
” நான் பெரியவன் ஆனவுடன் நாம் திருமணம் செய்துகொள்வோம் தானே ? “
நம்பிக்கைகள் தான் நமக்கு பலம். பலவீனம். பலவீனப்படுத்தும் நம்பிக்கைகளை கேள்விகள் கேட்டு அழிப்பது உலகின் யதார்த்தம். அந்த கேள்விகளை இந்தப் படத்தில் பெண் கேட்கிறாள். முடிந்தால் உங்களுக்குள் பதில் சொல்லிப்பாருங்களேன் !





