படம் சொல்லும் பாடம் – 051
” Privacy is a Sticky wicket. It has both sides – Good & Bad “
நம்முடைய தவறுகள் / வன்முறைகள் / அயோக்கியத்தனங்கள் / எங்கே இருந்து ஆரம்பிக்கின்றன என்று நினைக்கிறீர்கள் ?
நாம் மறைக்கும் மறைக்க விரும்பும் மறைத்து வைத்திருக்கும் தகவல்களில் இருந்து தான் இவை அனைத்தும் ஆரம்பிக்கின்றன. இல்லையா ?
என்ற கேள்வியை படம் முன் வைக்கும்போது .. ஒரு சிறு அதிர்வு நமக்குள் ஏற்படும் ! அதுதான் இந்தப் படத்தின் கரு.
சரி .. அதற்கான தீர்வு ?
Transparent ஆக மாறுவது தான் !
அது என்ன Transparent ?
நம் சார்ந்த அனைத்து தகவல்களையும் உலகம் படிக்கலாம். அதாவது இந்த உலகில் Secret என்று ஒன்று இல்லை. இல்லவே இல்லை. அப்படி ஒரு உலகத்தை நம்மால் நினைக்க முடிகிறதா ? முடிந்தால் … அங்கே வன்முறை இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை, களவு, வன்மம், கொலை, சிறை …எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை !
ஆனால் அப்படி இருக்க முடியுமா ? அல்லது இது ஒரு Virtual Dream ஆ ? அல்லது இதிலும் பிரச்சினைகள் வருமா ?
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை … எங்கும் அதில் இருந்து நமக்கு விலக விருப்பம் இல்லை ! அவ்வளவு சுவாரஸ்ய வேகம்.
Emma Watson Hollywood ன் Alia Bhat. மிக யதார்த்தமான நடிப்பு அவருடையது. Tom Hanks அப்படியே இன்றைய IT Founders ஐ நினைவு படுத்தும் நடிப்பும் Mannerism மும். மனிதர் அசத்துகிறார்.
இப்படி இருந்தால் தான் என்ன ? என்று நமக்குள் கேள்வியை ஏற்படுத்துவது தான் படத்தின் Success ! அதே போல …இன்னோரு பக்கத்தையும் அழகாக காண்பிப்பதிலும் அதன் வெற்றி ! Secrets நல்லதா கெட்டதா .. என்கிற ஒரு பார்வையை நமக்குள் கொண்டு வரும் படம். வித்தியாச கதைக்களம். இன்றைய Social Media வில் நாம் என்னவெல்லாம் செய்கிறோம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று படம் பார்த்து suttle ஆக கற்றுக்கொள்ளலாம்.





