நான் எனப்படும் நான் : 175
” Learn from Everyone. Follow No One. Follow The Learning that works For your Outcomes. “
” அந்த Cycle நட்பு பேச ஆரம்பித்தது.
” ஏற்காடு மேலே போயிட்டு வருவீங்களா ? “
” இல்லை. நான் Beginner. இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறேன். ” சொன்னேன்.
” எங்கே இருந்து வருகிறீர்கள் ? எவ்வளவு Kms ? “
சொன்னேன்.
” 30 Kms ….? Daily ? Not easy ” சொல்லிவிட்டு சிரிக்க .. நானும் சிரித்தேன்.
” ஒரு வருடமாக cycling செய்கிறேன். கிட்டத்தட்ட 20 plus Kgs குறைந்திருக்கிறேன். “
கேட்டுக்கொண்டேன்.
” சுத்தமாக வியர்த்து நன்றாக இருக்கிறது. இன்னமும் weight குறைக்க வேண்டும் “
கேட்டுக்கொண்டேன்.
Learning ; ஒரு வருடமாக Consistent ஆக Cycling செய்தால் உடலில் மாற்றம் வரக்கூடும்.
” எங்கே கொஞ்ச நாளா ஆளையே காணோம் ? “
தேநீர்க்கடையில் அவர் கேட்க …
” Training. இப்போ தான் வந்தேன். வந்தால் இங்கே வந்துவிடுவேன். “
அவர் சிரித்தார்.
” Regular Customer லாம் வரலைன்னா மனசு நாம என்ன தப்பு பண்றோம்னு கேட்கும் “
இருவரும் சிரித்தோம்.
Learning ; Regular customer வருவதை நிறுத்தினால் …மனம் உள்ளுக்குள் கேள்வி கேட்க வேண்டும்.
” என்ன தவறு நம் பக்கத்தில் இருக்ககூடும் ? “
Learning ஐ கவனித்தால் …Identity கள் காணாமல் போகும். Identity க்களை கொண்டாடுவதும் !. Identity க்களை கொண்டாட ஆரம்பிக்கும்போது தான் Learning பின் இருக்கைக்கு சென்று விடுகிறது. அது மட்டும் அல்ல …. Mega பிம்ப மனிதர்களை உருவாக்கி கொண்டு .. நம்மை சிறியதாக மாற்ற முயல்கிறோம்.
Learning தான் உலகின் இயக்கத்தின் ஆதாரப் புள்ளி. கவனம் அங்கே இருக்கட்டும்.
பயணிப்போம்.





