படம் சொல்லும் பாடம் – 053
” Death is a Reality. Welcome it. Never run away from it “



Colon Cancer ஆல் இறக்க போகிறோம் என்று தெரிந்த பின் என்ன செய்வோம் ? மனைவி மகன் என்று இருந்தால் என்ன செய்வோம் ? Teen age மகன் எனில் என்ன செய்வோம் ? Beach ல் குளிக்கும்போது .. பார்க்கும் இள வயது பெண்ணிடம் என்ன கேட்போம் ?
அனைத்திற்கும் பதில் சொல்லி ஆரம்பிக்கும் படம். அந்த பதில் ஒரு பயணமாக இருந்தால் ?அப்பா மகன் ஒரு புதிய பெண் .. என்று அந்த பயணம் தொடங்கினால் ?
அப்பாவுடன் சண்டையுடன் ஆரம்பிக்கும் படம் அப்படியே அழகாய் மென்மையாய் மாறுவதில் நாம் படத்திற்குள் செல்ல ஆரம்பிப்பது இயல்பு. நகர்தல் தான் மனித அடிப்படை. அதனால் தான் பயணம் மிக மிகப் பிடிக்கிறது நமக்கு. தன் இள வயது தோழியை சந்திக்கும் அப்பா, ஆட்டு மந்தையை நின்று கவனித்து .. பெருமூச்சு விட்டு ” இது போதும். போதும் ” என்று சொல்லும் அப்பா .. என்று அப்பாவை புரிய தனி முதிர்ச்சி தேவை.
” நீ நன்றாக முத்தமிடுவாயா ? ” என்கிற அந்த புதிய பெண்ணின் கேள்விக்கு …
” இதுவரை யாரும் Complaint செய்தது இல்லை ” என்கிற மகனின் பதிலில் அந்த Culture நமக்கு புரிகிறது. புரிய வேண்டும்.
அப்பாவுடன் கடலில் நடு இரவில் குளிக்க செல்லும் புதிய பெண் .. அதே சமயத்தில் அப்பாவுக்கு ஒன்று என்றால் உடனே வந்து உதவி செய்யும் அந்தப் பெண், சிகரெட் பிடிக்கும், குடிக்கும், மற்ற பெண்களுடன் பழகும் அப்பா, வார்த்தைகளில் எல்லை மீறும் அப்பா … இதை அனைத்தும் கவனித்து உடன் பயணிக்கும் மகன் … என்று நாம் அந்த Culture ஐ புரிந்து கொண்டால் மட்டுமே இந்தப் படம் நமக்கு புரிய ஆரம்பிக்கும். வழக்கமான நம் அப்பா மகன் படம் அல்ல இது. ஒரு வித சோகத்துடன் மகன், care உடன் பயணிக்கும் புதிய பெண், எந்தக் கட்டுப்பாடும் இல்லாது பேசும் வாழும் அப்பா … என்கிற ஒரு முரண் படம் இது ! இவ்வளவு எதிர்மறைகள் இருந்தாலும் வலியால் அவர் துடிக்கும்போது நமக்கும் துடிக்கும்.
South Africa திருமணம் ஒன்று, அவர்களின் பழக்க வழக்கங்கள்,ஆட்டம் …என்று அழகாக இருக்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே வரும் இவை ஒரு விடயத்தை சொல்கிறது. திருமணம் மகிழ்வாகவே ஆரம்பிக்கிறது. பிறகு நடப்பது எல்லாம் அவரவர் முடிவு !
புதிய நிலப்பரப்பு, புதிய கடல் பகுதிகள் .. என்று படம் எந்த இலக்கணமும் சாராது … விரிந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பட அழகும் அதுதான். வழக்கமான திரைக்கதை அமைப்பு அல்ல. சாகப்போவதால் .. அழுது கொண்டே இருக்க வேண்டும் என்பது விதியும் அல்ல. Colon Cancer என்பது பெருங்குடலின் பிரச்சினை. ஒரு இரத்தக் காட்சியில் அது அனைத்து வலிகளையும் சொல்லி விடுகிறது !
அனைவரையும் விருந்துக்கு அழைக்கும் அப்பா … சிரித்து மகிழ்வது தான் படம் நமக்கு சொல்லும் சேதி. இறப்புக்கு முன் கிடைக்கும் இந்த புரிதல் …நாம் வாழும் காலத்திலேயே நமக்கு கிடைக்க வேண்டும். அனைவரையும் விருந்துக்கு அழைத்து அனைவருடனும் சிரித்து … நாம் எப்போது உணவு உண்டோம் ?. யோசிக்கவேண்டிய கேள்வி.
அப்பாவும் மகனும் சண்டை போடும் காட்சியில் .. ” Dying is Easy. Living .. thats the Challenge ” என்கிற அப்பாவின் வார்தைக்கான ஆழத்தை படிக்கவாவது இந்த படத்தை பார்க்க வேண்டும்.
அனைவரும் நம்முடன் ஒரு காரணத்திற்காகவே சேர்கிறார்கள். விலகுகிறார்கள். பயணிக்கிறார்கள். படம் மௌனமாக சொல்லாமல் சொல்வதில் இருக்கிறது வாழ்க்கை !


