படம் சொல்லும் பாடம் – 055
” Journalism is .. not just reporting. Its about Uncovering The Hidden Truth. “
ஒரு பத்திரிகை அலுவலகம். ஒருவர் Retire ஆகிறார் என்று ஆரம்பிக்கும் அந்த கதையில் .. சேரும் ஒருவர் முதல் பேச்சில் இருந்தே ..
” I want to do it BETTER “
என்று ஆரம்பிப்பதோடு வேகம் ஆரம்பிக்கிறது.
ஒரு Church க்கு எதிராக !
குழந்தைகளிடம் பாலியல் வன்புணர்வு.
குழந்தைகள் உண்மையை சொல்வது இல்லை.
பொது வாழ்க்கை. எதிர்கால பயம்.
என்ன வேண்டுமானாலும் !
இவ்வளவு தான் கதை !
Journalist என்றால் .. Mike எடுத்து கேள்வி கேட்பதோடு முடிந்து விடுகிறதா ?
Investigative Journalism பற்றி நாம் என்றாவது யோசித்து இருக்கிறோமா ? அரசியல் Expose தவிர !
ஒரே நேரத்தில் பலரை தொடர்பு கொண்டு investigate செய்யும் அழகே பெரும் ஆச்சர்யம் ! சிறு வயதில் தனக்கு அநியாயமாக நடந்தவைகளை மீண்டும் கொண்டு வருவது எளிதல்ல ! அதை செய்யும் Professionalism ஒரு பெற்றோராக நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. Church ஐ விடுவோம். யார் இதை செய்தாலும் அந்த சிறு குழந்தைகளுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை நாம் நிச்சயம் அறிய வேண்டும். ( படம் அதுவல்ல. ஆனால் ஒரு பெற்றோராக நம் குழந்தைகள் எங்கே தவறக்கூடும் என்பது நமக்கு தெரிய வேண்டும் என்கிற பார்வையை ஏற்படுத்தும் படம் ! ).
இப்படி வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்படும் குழந்தைகள் பெண் குழந்தைகள் என்றா நினைக்கிறீர்கள் ?
பெண் குழந்தைகளும் ஆனால் குறைவாக ! அப்படியானால் .. ஆண் குழந்தைகள் தான் அதிகம் !
ஏன் அப்படி ?
பதில் அதிர்ச்சியான ஒன்று. ஆம். ஆண் குழந்தைகள் தான் வெளியே சொல்வது இல்லை. ( ஆண் என்பதால் ! ) அப்படி வன்புணர்வு செய்யப்பட்டவர்களில் பலர் உயிரோடு இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் !
இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளி எங்கே வருகிறது ?
பதில் மிக எளிது.
மனிதர்களை கடவுளின் அவதாரமாக கவனிக்க ஆரம்பிப்பதில் இருந்து தான் !
எந்த மதத்திலும் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் மனிதன் மனிதன் தான் ! வீடு என்று இருந்தால் கழிவறை என்று ஒன்று இருக்கும். மனிதன் என்று இருந்தால் .. அவனுக்கு அவளுக்கு இருள் பக்கங்களும் இருக்கும்.
Investigate செய்ய செய்ய படம் வேக வேகமாய் பறக்க ஆரம்பிக்கிறது ! ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு அதிர்ச்சி புள்ளியை கொண்டுவர … நமக்கு இப்படியும் நடக்குமா என்று மனதில் கேள்விக்குறிகள் !
13 Priests தவறு செய்திருக்க கூடும் என்று ஆரம்பிக்கும் Investigation .. 87 என்று ஆகும்போது நமக்கும் அதிர்ச்சியாகிப் போகிறது !
நடிப்பு என்று சொல்ல முடியா நடிப்பு. கூடவே நாம் பயணித்த உணர்வு. ஆற்றாமை. கோபம். கேள்வி …என்று அனைத்தும் நமக்குள் எழுப்பும் நடிப்பு அந்த மொத்த Crew வுடையது !
கடைசியாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள் என்று திரையில் வரும்போது நமக்குள் உள்ளே ஒரு கோபம் வேகம் .. கூடவே …நம் குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்கிற எச்சரிக்கை வரும் !
வர வேண்டும் !!
Church Temple Mosque அனைத்தும் Concept ல் சரி. மனிதன் தான் அதை ஆள்கிறான் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும் !





