படமும் கற்றலும் : 028
” Look at The Intent and Be a Human “
Twitter ல் அந்த புகைப்படத்தை பார்த்தபோது .. மனம் ஒரு நிமிடம் சட்டென நிலைத்தது. லதா மங்கேஷ்கர் க்கு மனதில் RiP சொல்லிய படியே மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தபோது .. ஒரு பயணியாக இந்தியாவை வலம் வந்த எனக்குள் அப்படி ஒரு நெகிழ்வு.
இந்தியா முழுக்க ஏகப்பட்ட ஜாதி, இன, மத, மொழி … இத்யாதி இத்யாதி … இருக்கின்றன. ஒவ்வொரு 600 Kms க்கும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும் இந்த நாடு நிச்சயமாக ஒரு Diversity கவிதை தான் ! ஆனால் அந்த கவிதை உணர்வு பூர்வமான கவிதையாக மாறுவது அதில் உள்ள மனிதம் என்கிற எழுத்துக்களால் !
Pune வில் நான் Accident ஐ சந்தித்த போது .. எனக்கு உதவ வந்த எவரும் என் இனத்தை மதத்தை ஜாதியை மொழியை தேசத்தை மாநிலத்தை கேட்கவில்லை. மாறாக … ” நீங்கள் நலமாக இருக்கிறீர்களா ? ” என்று மட்டுமே கேட்டார்கள்.
ராஜஸ்தானில் என்னிடம் உதவி கேட்ட முதியவருக்கு அவருக்கான இடத்தில் அவரை Drop செய்ய Car ல் ஏற்றிச் சென்று அவர் வீட்டை அடையும் வரை …அவர் என்னவானவர் என்று எனக்கு கேட்க தோன்றவும் இல்லை. அவரும் கேட்கவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று சொன்னார்.
” என் மகனை போல இருக்கிறீர்கள். நன்றி. “
Sikkim ல் Restaurant இல்லா பொது இடத்தில் .. கொஞ்சம் பசியுடன் நான் உணவிற்கு தேடிக்கொண்டு இருந்தபோது … எனக்கு உணவளித்து சுடவைத்த குடிநீரை கூடவே கொடுத்து அனுப்பிய … அந்தப் பெண்மணியின் முகம் மட்டுமே இன்னமும் நன்றியோடு நினைவில் ! ஜாதி மதம் இனம் மொழி அனைத்தும் கேட்கப்படவில்லை. சொல்லப்படவில்லை !
Shah Rukh ன் அந்த ” துவாவும் ” அவரது Manager துணையின் ” சாமி கும்பிடுதலும் ” தான் இந்தியா ! இரு வாழ்க்கையின் தனித்தன்மையும், இத்தனை வருடங்கள் உடன் பயணித்த / வாழ்ந்த வாழ்வின் புரிதலும் தான் இந்த புகைப்படம். இந்த புரிதல் இந்தியாவிற்கு வந்தால் மிக மிக நல்லது. இல்லை எனில் … எனக்காக நீ மாற்றம் கொள் – என்கிற வறட்டுப் பிடிவாதத்தில் இந்தியனின் வாழ்க்கை சர்வ நாசம் அடையும் !
எப்போது தனி மனித வாழ்வில் .. அவரவர் சுதந்திரம் நிலை நிறுத்தப்படுகிறதோ … அப்போது தான் அது முதிர்ந்த நாடாக மாறும். அதை விட்டுவிட்டு .. உண்பது, உடுத்துவது, உறங்குவது, சாமி கும்பிடுவது, பேசுவது, எழுதுவது, நிற்பது, நடப்பது .. இவற்றிலெல்லாம் ஒரு நாடு தன் மூக்கை நுழைத்து கொண்டு இருந்தால் .. அந்த நாட்டிற்கு .. வளர்ச்சியை நோக்கிய தன் இலக்கில் தெளிவு இல்லை என்று அர்த்தம். நாட்டுக்கு மட்டும் அல்ல .. அந்த நாட்டை ஆள்பவர்களுக்கும் வளர்ச்சியை நோக்கிய இலக்கில் தெளிவு இல்லை … என்றே அர்த்தம் !
யோசிப்போம் ! நிதானிப்போம் ! சுதந்திரத்தில் தெளிவாக இருப்போம். புரிதல் நம் வாழ்க்கையை ஆளட்டும்.





