நான் எனப்படும் நான் : 177
” Always Find ‘ What Next ? ‘ options. “
சுத்தமாக இருக்கிறது சென்னை Central. Pan Parag மனிதர்கள் இன்னமும் நம்மை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பது இப்போதைக்கு ஆறுதல் ! Coffee கொடுக்கும் இடத்தில் ஒரு சின்ன குழப்பம். தொழிலாளி தவறு என்று வாடிக்கையாளர் வாதிட .. தொழிலாளர் வந்து நிதானமாக சிரித்துக்கொண்டே விளக்கம் சொல்ல .. வாடிக்கையாளர் வருத்தம் தெரிவித்தார். வாடிக்கையாளர் சென்ற பின் தொழிலாளி சொன்னார்.
” அவர் தான் தவறு என்று தெரியும். கொஞ்சம் பொறுமையாக சொன்னேன். அவ்வளவு தான். ” என்று சிரித்தார்.
அந்த ” கொஞ்சம் பொறுமையாக ” வில் இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம்.
” Postpone Anger. Get other possibilities “
Ola வை சோதித்தால் Rs 900 காண்பிக்கிறது ! எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுந்தது …
” நீ சாதாரணமானவன் தானே ? “
Options யோசித்தால் ..
1. நகருக்குள் இரயில்
2. பேருந்து
3. நடப்பது.
அருகில் இருந்திருந்தால் நடந்திருக்கலாம். உடற்பயிற்சியும் முடிந்திருக்கும். தொலைதூரம் என்பதால் … 1 அல்லது 2 ஐ யோசித்தால் .. 2 நீன்ற காலமாக நான் உபயோகப்படுதவில்லை என்று சொன்னது. Google Map ல் வரைபடம் Check செய்து செல்லவிருக்கும் பகுதியின் அருகே இருக்கும் பகுதிகளை கவனித்து … பேருந்து நிலையத்தில் நின்றால் .. உடனே பேருந்து வருகிறது. அதுவும் யாரும் அற்று. அதிலும் முன் இருக்கும் முதல் இருக்கை வா வா என்று அழைக்க .. ஏறி அமர்ந்தால் ஓட்டுநர் சிரித்தார்.
” ஆமாம் … அவனுங்களுக்கு கொடுத்து அழுவதை விட இதிலே போகலாம் ” என்று மீண்டும் சிரித்தார்.
நடத்துனரிடம் நான் செல்ல வேண்டிய இடம் சொன்னவுடன் அவர் ‘ எங்கே இறங்கலாம் ‘ என்று சிறு ஆலோசனை சொல்லி .. சிரித்தார். என்ன ஒரு ஆச்சரியம் ! ஓட்டுநர் நடத்துனர் இருவரும் சிரித்த முகத்துடன் !
மொத்தமே 30 ரூபாய்க்கு பேருந்து பயணம் முடிவுக்கு வரும். சரியாக சொன்னால் 870 ரூபாய் மிச்ச தொகை. அதை விட முக்கியமான ஒன்று … சிரித்து என்னுடன் பயணிக்கும் ஓட்டுநர் நடத்துனர் !
Parallel வரிசையில் …
” Stalin அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்குனதை பார்த்தியா ? “
ஒரு வயதானவர் சொல்ல அருகே இருந்தவர் சொன்னார் …
” அவங்க யாரு என்னான்றதுலாம் இருக்கட்டும். முதல் அமைச்சர் ஆன பின்னும் கால்ல விழணுமே ! பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும் “
” Check possibilities. Treasures may be waiting there “
” மடிப்பாக்கம் போகுமா ? “
வயதான அந்த அம்மா கேட்டதற்கு ஓட்டுநர் சொன்னார் ..
” போகும்மா. சார் .. கொஞ்சம் அவங்களுக்கு உதவி பண்ணுங்களேன் “
அவர் சொல்லும்போதே நான் எழுந்து செய்ய ஆரம்பிக்க அந்த அம்மா நன்றி சொல்லிக்கொண்டே மேலே வந்தார்.
மனதிற்குள் ஒரு வரி மின்னியது
” நல்ல ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை நன்றாகவே இருக்கும் “
” Listen to Inner Voice. “





