நான் எனப்படும் நான் : 178
காலையில் மழை. அதனால் Cycling இல்லை. படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதில் கவனம் ஆரம்பித்தாயிற்று.
” மாண்புமிகு மேயர் அவர்களே ” இது இப்போது ஒரு Topic ஆக மாறுவது ஆச்சர்யம் அல்ல. பல முகமூடிகள் கழலப்போகும் நேரம் இது.
முகமூடி 01 ;
எதற்கு மேயர் பதவி எல்லாம் ?
ஆம். அதே கேள்வி தான். ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய முறை. பழைய முறை. தேவையா ?
இங்கே எவ்வளவோ பழைய முறைகள் இருக்கின்றன.
டவாலி இன்னமும் ” பராக் பராக் ” சொல்கிறார். அதை இன்னமும் தொடர்கிறோம். ஏன் டவாலி அதை சொல்ல வேண்டும் ?
கணம் கோர்ட்டார் அவர்களே … இன்னமும் தொடர்கிறது. ஏன் அப்படி சொல்ல வேண்டும் ? அப்படி சொன்னால் தான் அவருக்கு மரியாதையா ?
அங்கே இந்த கேள்விகள் எழவில்லை. இப்போது எழுகிறதே .. ஏன் ?



முகமூடி 2 ;
திடீரென்று ஆங்கில முறை அல்லது பழைய முறை தேவையா என்கிற கேள்வி ?
கல்வி முறை இன்னமும் பெரும்பாலும் ஆங்கில முறை… இன்னமும் தொடர்கிறதே ?
VIP க்கு Car கதவை திறந்து விடுதல், VIP க்களை தூக்கிக்கொண்டு செல்லுதல், VIP யின் முன்னும் பின்னும் நடந்து செல்லுதல் … இன்னமும் தொடர்கிறதே ? அந்த Car ஐ வாங்கிய அவருக்கு கதவை திறந்து வெளியே வர தெரியாதா ? அவரால் தனியாக நடந்து வர முடியாதா ? அவ்வளவு பயமா ?



முகமூடி 3 ;
யார் யாரோ மேற் பதவிகளுக்கு வருகிறார்கள் … ஒரு முறை வேண்டாமா ?
மேற்பதவிகளுக்கு இன்னார் தான் வர வேண்டும் என்று ஒரு பார்வை உண்டு. நீதிபதி என்றால் இந்த சமூகத்தவர் … Doctor என்றால் இந்த சமூகத்தவர் … Share Market என்றால் இந்த சமூகத்தவர் …
இன்னமும் தொடர்கிறதே ? ஏன் ?
மலைஜாதி மக்களில் ஏன் ஒருவர் நீதிபதி ஆகக்கூடாது ? Doctor ஆகக்கூடாது ? Collector ஆகக்கூடாது ?



இந்த முகமூடிகளுக்கு பின் .. சில கேள்விகள் தான் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
” நீ என்ன ஜாதி ?
நீ எப்படி இங்கு வந்தாய் ?
நீ ஏன் இங்கு வருகிறாய் ?
நீயெல்லாம் இங்கே வரலாமா ? “
சிறுபிள்ளைத்தனங்களின் உச்சம் இந்தக் கேள்வி.
ஒரு Hotel க்கு சென்றால் .. யார் யார் என்ன என்ன சமைத்தார்கள் அல்லது யார் பரிமாறுகிறார்கள் ? என்றெல்லாம் நாம் கவனிப்பது இல்லை. சாப்பாடு கிடைத்தால் போதும்.
ஒரு Cinema வுக்கு சென்றால் இப்படி கவனிப்பது இல்லை. Ticket கிடைத்தால் போதும்.
ஒரு கல்லூரிக்கு மகனை மகளை … சேர்க்க செல்லும்போது இப்படி கவனிப்பது இல்லை. Seat கிடைத்தால் போதும்.
Bus ல் செல்கிறோம். Conductor Driver யார் என்று கேட்பது இல்லை. போகுமிடம் சேர்ந்தால் போதும்.
அப்படியானால் இது எங்கே வருகிறது ? கவனிப்போம். இது வெளியில் இருந்து வரவில்லை. மனதில் இருந்து வருகிறது. ஆழ் மனதில் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. அந்த கேள்வியின் வடிவங்கள் தான் இந்த முகமூடிகள்.



Car கண்ணாடியில் மழைநீர் வழிந்து கொண்டு இருந்தது. கண்ணாடி வழியாக பார்வை தெளிவாக . ஆனால் சில நொடிகள் தான். Wiper வந்ததும் பார்வை கிடைத்து விட்டது.
தெளிவற்ற பார்வை எல்லாம் சில காலத்திற்கு தான் ! இங்கே தேவை ….. Wiper என்கிற பகுத்தறிவு தான்.
எப்போதெல்லாம் மழைநீர் பார்வையை மறைக்கிறதோ … அப்போதெல்லாம் Wiper களின் இயக்கம் ஆரம்பமாகும். மற்ற நேரங்களில் Wiper அமைதியாக இருக்கும்.
ஆகவே ..
மாண்புமிகு மேயர் அவர்களே .. இல்லை இல்லை ..
பெரு மதிப்பிற்குரிய மதிப்பும் மாண்பும் மிகுந்த மேயர் அவர்களே …
உங்களின் பணி ஆரம்பம் ஆகட்டும். தொடரட்டும் !


