படம் சொல்லும் பாடம் – 056
” MEMORIES are Blessing if we have control Over it. They are Disaster if They have a Control over Us “



தாத்தா அப்பத்தா அம்மா அப்பா ….அனைவரும் தன் உணர் நிலையில் இருக்கும் வரை மட்டுமே அவர்கள் நமக்கு Blessing. அப்படி இல்லை எனில் .. நாம் அவர்களுக்கு Blessing !
தாத்தா விற்கு Dementia. நினைவுகள் தப்பிப் போகிறது. ஒன்றுக்கு ஒன்று கோர்வை இல்லாத பேச்சு, யோசித்தல், செயல், நடவடிக்கைகள் … அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பம் ….. தாத்தாவை புரிந்து கொள்ளும் அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கும் பெயர்த்தி … ( பேத்தி ), மகன், கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சித்தாலும் … கோபப்படும் மருமகள் ! நினைவு தப்பினால் வாழ்க்கை எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது ? ! இதை கடந்து செல்லவும் ஒரு வழி சொல்லப்படுகிறது. Humor and Wisdom is theOnly Way !
” கண்ணுக்கு முன்னே இருப்பதை எப்படி அவரால் பார்க்க முடியவில்லை ? ” என்று கேட்கும் மருமகளுக்கு வரும் கேள்வி தான் பல குடும்பங்களுக்கு பதில் !
” நம் கண்ணுக்கு முன்னே இருப்பதை நாம் பார்க்கிறோமா ? “
” Seeing something that’s not in front of eyes is called as ” Known Blindness “



பெயர்த்தி க்கு மட்டும் கண்ணுக்கு முன் இருக்கும் தாத்தா அப்படியே தெரிகிறார். அவள் ஒரு முடிவு எடுக்கிறாள். தாத்தா வை கூட்டிக்கொண்டு இருவரின் பயணத்தை தொடங்குகிறாள். அதுதான் கதை !
தாத்தா வாக நடிக்கவே இல்லை. அப்படியே வாழ்கிறார் மனிதர். பெயர்த்தியும் அப்படியே ! படம் முழுக்க வாழ்க்கைப் பாடங்கள். நம் வீட்டில் illness உடன் ஒருவர் இருப்பின் இந்தப் படம் இன்னமுமே நிறைய புரியும். புரிய வைக்கும்.
” Lessons are Everywhere. Book is Just for People who can’t Travel, Meet people and Learn from them “



தாத்தாவும் பெயர்த்தியுமான தருணங்கள் காட்சிகள் எழுதும் கவிதை.
அவசரம் அவசரமாக பார்க்க இது Action படம் அல்ல. நிதானமாக பார்க்க இது விருதுப் படமும் அல்ல. இந்தப் படம் நமக்குள் கேள்விகளை Suttle ஆக எழுப்பும் ஒரு வாழ்வியல் !
படம் பார்க்க தயாராகும் முன் .. அனைத்து உலகம் மற்றும் மக்கள் பற்றிய அனைத்து Judgements ஐயும் ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் …. புதிய மனிதனாக நாம் எழுவது உறுதி !
” When we see the Other Side of Everything, Balance Forms within … Beautifully “


