படம் சொல்லும் பாடம் – 057
” There is always an another Perspective. The one Looks for it, gets it. “



காட்சி 01 ;
Car ல் வரும் ஒருவனை கடக்கும் ஒரு Van ல் இருக்கும் 7 பேர் கிண்டல் செய்கிறார்கள். Car ல் இருந்து இறங்கும் அந்த மனிதன் 7 பேரையும் சுட்டுக்கொள்கிறான்.
காட்சி 02 ;
07 பேரை சுட்டுக்கொன்ற மனிதனுக்கு கண்டிப்பாக மரண தண்டனை தான் கிடைக்கும் – என்கிற Court ஆரம்ப காட்சி.
அவ்வளவு தான் படக்கதை.
மரண தண்டனை யா ? இல்லையா ?
வாத, பிரதிவாத கருத்துக்களை கேட்டால் மனித வாழ்வின் அறியா பக்கங்கள் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கின்றன. யோசிக்க வைக்கின்றன. நாம் நினைப்பது போல தினம் நாம் கவனிக்கும் கொலை கொள்ளைகளில் ஒரு பக்கம் மட்டுமே இல்லை. இன்னொரு பக்கமும் இருக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கில் கொல்லும் போது நடக்கும் நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோமா ? இந்தப் படம் அந்தப் பக்கங்களை நம் கண் முன்னே கொண்டு வருகிறது. 17 வயதுப் பையனை தூக்கில் போடும் வேலையில் வைப்பதில் இருந்து .. அரசாங்க பொறுப்பு கேள்விக்குறியாகிறது. Sheperd ம் Butcher ம் அங்கே தான் வருகிறது.
Advocate ஆக நடித்தவர் நடிப்பு தரமான ஒன்று. மிக மிக ஆழமாக ஆனால் சரியாக அவர் வைக்கும் கருத்துகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. தூக்கில் போட வேண்டிய மரண தண்டனை தேவையா என்பது ஒரு புறம் … அது நிறைவேற்றப்படும் முறைகள் சரியா என்னும் கேள்வி ஒரு புறம் என்று … படம் நமக்குள் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.


