நான் எனப்படும் நான் : 180
” Age is Just a Number “



வயது 70 plus. Covid நேரத்தில் அனைவரும் உயிர் பற்றிய பயத்தில் பேசிக்கொண்டு, யோசித்துக்கொண்டு, இயங்கிக்கொண்டு வீட்டிற்குள் இருக்கும்போது … அவர் தன் அடுத்த தொழில் விரிவாக்கத்தை கையில் எடுக்கிறார். வீட்டில் கொஞ்சம் ” வேண்டாமே இப்போது ” எதிர்ப்பு. ஆனாலும் அவரின் ஓர் முடிவை எடுத்துவிட்டால் அவரை யாராலும் தடுக்க முடியாது. அப்படியாக அந்த விரிவாக்கம் தொடங்கி இப்போது ஒன்று plus வருடங்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இன்று ஒரு விருதுடன் தன் நாளை துவக்குகிறார்.
அவர் அப்பா. அவரின் உடன் எப்போதும் தோள் கொடுத்து பயணிக்கும் அம்மா. அவர்களின் மகன் நான். மூவரும் தான் மேலே புகைப்படத்தில் !
” When The Whole World says ” Why ” Throw a Question ‘ Why Not ? ‘ and Find ways “



அப்பா இளைத்திருக்கிறார். இரவு 09.00 மணிக்கு தூக்கம். காலை 3.45 க்கு விழிப்பு. ஒரு மணி நேர யோகா பயிற்சி, ஒரு மணி நேர நடைப்பயிற்சி, அளவான உணவு, நிதானமான பேச்சு, தீர்க்கமான இலக்கு நோக்கிய பார்வை .. என்று பயணிக்கும் அவரின் வாழ்வில் எனக்கு தெரிந்து நல்ல விடயங்களை அவரால் இயன்ற அளவிற்கு நற்செயல்களாக விதைத்துக்கொண்டே வந்திருக்கிறார்.
” ” சமூக, தனி மனித, நல்லது ” மட்டுமே செய்து கொண்டே இரு. நல்லது மட்டுமே உன்னுடன் தங்கும். மற்றது அனைத்தும் உன்னை விட்டும் விலகும் “
என்பது அவரின் இயல்பு. எனக்கு பாடமும்.
” It takes Years to understand the Value of a Good Seed “



இன்றைய நிகழ்வை அருகில் இருந்து பார்க்க என்னையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். இருவரும் பிரமிப்பாகவே கணவரை அப்பாவை கவனிக்கிறோம். இயங்குதலில் தான் அவருக்கு ஈடுபாடு அதிகம். வீண் பேச்சு, வெட்டி வேலை மனிதர்கள், புறம் பேசுதல், தேவை அற்ற உலகப் பார்வைகள், தன் Controlக்கு அப்பாற்பட்ட உலகம் பற்றிய Comments போன்றவை அவரின் இயல்பில் வராது. அவர் சார் மனிதர்களின் வட்டத்திலும்.
யோசிக்க வைக்கும் கேள்விகள், பார்வைகள், புதிய சிந்தனைகள் ….அவரின் பலம். நேற்றைய பயணத்தில் அவரின் ஒரு புதிய பார்வை … .
” இந்த பெரும் பாலங்களின் கீழ் புறப்பகுதியை கடைகளாக கட்டி, ஏழ்மையானவர்களுக்கு, குறைந்த வாடகையில் கொடுத்தால் அவர்களின் பிழைப்புக்கு வசதியாக இருக்க கூடும் “
” Always find a way to support Needy. “


