நான் எனப்படும் நான் : 179
” Old Memories Move with us Consistently “
சாலையை தவிர வேறு எங்கும் பார்க்கா அந்த முதியவர், தலைக்கு மேல் கட்டிய உரிமா, அவர் அணிந்திருக்கும் பச்சை நிற மேற்புற உள்ளாடை, மடித்துக் கட்டிய கைலி, ஒரு Wire கூடை, அவர் ஓட்டும் பழைய மிதிவண்டி, சில மனிதர்களே உள்ள சாலை, அவரை கடந்து சென்ற வேகமான வாகனங்கள் … அனைத்தும் சில ஞாபகங்களை கொண்டு வந்தன.
ஞாபகம் 01 ;
ஆரம்ப கால மிதிவண்டி ஞாபகம் ;
பள்ளி நாட்களில் அப்பா மிதிவண்டியை நிறுத்தும் அந்த ஒரு கணத்துக்காக காத்திருப்பது உண்டு. பூட்டை திறந்து வண்டியை நகர்த்தும்போது மனம் இறக்கை கட்டி முன்னே பறக்கும். அந்த மிதிவண்டியின் Bell இன்னொரு உற்சாக ஒலி. வண்டி வேகம் எடுக்க எடுக்க … கை விரல்கள் Break ஐ நோக்கி இயல்பாக நகரும். முடி பறக்க ஆரம்பிக்கும். பள்ளம் மேடு வரும் போது .. இடது பக்கம் வலது பக்கம் திருப்பி ஓட்டும் இலாவகம் …அனைத்தும் !
ஞாபகம் 02 ;
உருமா அல்லது உரிமா ;
உறவினர்கள் வீட்டு நிகழ்வு ஒன்றில் ..
” உறம்பொறை ஆண்டவர்களே … உருமா கட்டலாமா ? “
என்று நான் கேட்ட கேள்வி இன்னமும் நினைவில்.
அனைவரும் சிரித்து எனக்கு ” கட்டலாம் ” என்று சொன்னது காட்சியாக நினைவில்.
ஞாபகம் 03
முதன் முதலில் கைலி அல்லது லுங்கி கட்டிய போது … என்னவோ ஒரு பெரிய மனித தோரணை ! புதிய கைலி கீழ் பகுதியில் மடங்காது. மடங்க வைத்து நடக்கும்போது ஒரு பெரிய மனுஷ தோரணம் வந்து விடும். Trouser ல் இருந்து .. லுங்கி க்கு முன்னேற்றம். அநேகமாய் முதல் Dress Code மாற்றம் இங்கிருந்து தான்.
ஞாபகம் 04 ;
இயங்கிக்கொண்டே இருக்கும் அவர் தான் எனக்கு நிகழ்கால ஞாபகம்.
இயங்கிக்கொண்டே இருப்பதில் இருக்கும் ஆனந்தம் அளவிட முடியாத ஒன்று. சோர்ந்து வாழும் மனிதர்களுக்கு இந்த இயங்குவதால் கிடைக்கும் ஆனந்தம் புரிவது இல்லை ! உடற்பயிற்சி, Sessions, Share Market, Reading, Writing, Counselling, Travel … என்று இயங்குவதால், அதனால் ஏற்படும் தினசரி நகர்வு நம்மை நம் இலக்கு நோக்கி நகர்த்துகிறது என்கிற உணர்வு … இன்றைய வேலையை முடித்தாயிற்று என்கிற நிறைவுடன் முடியும் இரவு .. இதன் மகிழ்வே தனி தான். இயக்கம் மட்டுமே அதை முடிவு செய்யும். இயங்குவதால் மட்டுமே இது கிடைக்கும்.
ஞாபகம் 05 ;
உங்களுடையதாக இருக்கட்டும். இந்த புகைப்படம் மூலம் உங்களுக்கு வரும் நினைவுகளை பகிரலாம். அது இன்னும் பலருக்கு பல நினைவுகளை ஏற்படுத்தலாம்.
பயணிப்போம்.





