படம் சொல்லும் பாடம் – 058
” Slavery is the worst form of human mind’s Thinking “



” இன்று உனக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. பழைய பேரை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. “
என்றவுடன்
” Harriet Truman “
என்று சொல்வதில் இருந்து ஓர் புதிய உலகம் அங்கே பிறக்கிறது !
” நீ மட்டும் இல்லை. உன் குழத்தைகளும் எங்களுக்கு அடிமை “
என்று சொல்லும் அளவிற்கு ஒரு காலம் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. மனிதர்களுக்கு அங்கே விலை உண்டு. கொஞ்ச கால உழைப்பிற்கு பின் அடிமைகள் விற்கப்படுவதும் உண்டு. அடிமைகளின் விலை அப்போதே 1000 2000 Dollar களில். அதாவது உடல்வாகு, உழைப்பு மற்றும் வயது சார்ந்து ! கிட்டத்தட்ட மாடு பிடிக்க போகும் சந்தையில் நடக்கும் அனைத்தும்.
இதில் இருந்து தப்பிக்க நினைக்கும் பெண் என்னவாகிறாள் என்பது தான் கதை. உண்மையாக நடந்த சம்பவம் என்பதும், கடைசியாக அந்த உண்மை பெண்மணியின் முகம் பார்க்கும்போதும் மரியாதை மிக மிக அதிகமாகிறது.
எந்த வெள்ளையர்கள் இதை எல்லாம் செய்தார்களோ அதே நாட்டில் நல்ல வெள்ளையர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களால் தான் Harriet போன்றவர்களால் தப்பிக்க முடிந்திருக்கிறது. மொத்தமாக ஒரு சமுதாயம் எப்போதும் தப்பாக மாறிவிடாது. எப்பேர்ப்பட்ட மோசமான உலகத்திற்கும் நல்ல மனிதர்கள் அடையாளம் உண்டு.


