நான் எனப்படும் நான் : 182
” சிரித்துக் கடந்து விடு. மீண்டும் சிரிக்க கற்றுக்கொள். மொத்த வாழ்க்கைக்கும் அது மட்டுமே நிரந்தரம் “
பல வேளைகளில் நாம் நினைத்தது வேறு நடந்தது வேறு – என்னும் சூழ்நிலைகளை கடந்திருந்போம். அப்போது நம்மில் பலருக்கு … முகம் .. கோபம், மௌனம், வேகம், சோர்வு, தீர்க்கம் அற்று .. என்றெல்லாம் மாறிப்போகும். வார்த்தைகள் தடித்து விடும். வேறு பார்வைகள் வந்துவிடும். தேவையற்ற குரல் ஒலிக்கும். Alternate எதுவும் இல்லையா ?
இருக்கிறது. சிரித்துக் கடப்பது தான் அது !
சொல்வதால் நான் அப்படி வாழ்வதாக அர்த்தம் இல்லை. நானும் இதில் இன்னமும் நிறைய work செய்ய வேண்டியது இருக்கிறது. வருடத்தில் பல முறை அப்படி வாழ்ந்தாலும் சிலமுறை … இந்த சவால் வந்துவிடுகிறது.
இந்த உலகின் மிச்சமாக சிரிப்பு மட்டுமே நம்முடன் வருவதாக தோன்றுகிறது. மீதம் எல்லாம் சில நொடிகள், மணித்துளிகள், நேரங்கள் என்று மறைந்து விடுகின்றன. அல்லது மறைந்து கொள்கின்றன. அதாவது கோபமாய் ஒருவர் இருந்துகொண்டே இருக்க முடியாது. இருப்பதை அவரும் உலகமும் விரும்புவது இல்லை. ஆனால் சிரித்த வண்ணம் இருக்கமுடியும். இதை உலகம் விரும்புகிறது. அப்படி இருக்க முடிவது தான் Challenge. எது Challenge ஆக இருக்கிறதோ அதைத்தானே செய்ய வேண்டும் ?. கோபம், சோர்வு, தயக்கம் … முகங்கள் உடனடியாக வந்துவிடும். அதே வேகத்தில் சென்று விடும்.
ஆனால் சிரிக்கும் முகம் .. ? அது எப்போதும் நமக்கு அருகிலேயே இருக்கிறது. நம்முடன் பயணிக்கிறது. குறிப்பாக முகத்தில் எப்போதுமே இருக்கக்கூடிய வரம் பெற்ற ஒன்று அது.
அதை ஏன் நாம் வைத்துக்கொள்ள முயல்வது இல்லை ? அதற்கு இந்த உலக Reflection ம் ஓர் காரணம்.
இப்படி எல்லாம் நம்மில் பலர் React செய்யும்போது மனம் ” கோபத்தை ” அல்லது வேறு ஒரு முகத்தை கையில் எடுக்கிறது. இங்கே தான் இன்னமும் நம்மை சரி செய்து கொள்ள வேண்டியது தேவையாகிறது. ( நம்மை சரி செய்வது மட்டுமே உலகில் முடிந்த ஒன்று ) அதாவது சிரித்துக்கொண்டே இன்னமும் வலுவாக, திறமையாக, ஆணித்தரமாக, சான்றுகளுடன் … பேசுவது …என்னும் திறமை அடுத்த உயரத்திற்கு தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படலாம்.
எப்படி இந்த முகத்தை தக்க வைத்துக் கொள்வது ?
அடுத்து கோபப்படும், சோர்ந்து போகும், வருத்தப்படும் … தருணங்களில் .. எனக்கு இங்கே புகைப்படத்தில் இருக்கும் முகம் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வரும். ( உங்களுக்கான அப்படியான முகத்தை நீங்கள் புகைப்படமாக எடுத்து ScreenSaver ல் வைத்துக்கொள்ளலாம். அல்லது அதே Cellphone ஐ உடைத்து கோபம் தணிக்கலாம் 

). இது ஒரு Strategy. பல முறை work ஆகியிருக்கிறது. எந்த முகம் நமக்கு தேவையோ அதை மீண்டும் மீண்டும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திக் கொள்வது !
” நீ எதுவாக இருக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் “
ஞாபகம் வருகிறதா ?
அதெல்லாம் சரி ? ஏன் கண் மூடி ?
நிறைய நேரங்களில் கண்களை மூடிக்கொள்வது நல்லது. அனைத்தையும் பார்த்து தேர்வு செய்வதை விட … தேவையற்ற நேரங்களில் கண்களை மூடிக்கொள்வது மிக மிக நல்லது !
கண்களை மூடி சிரித்து ஒரு Selfie எடுத்து, ScreenSaver ல் வைத்து …
அட .. முயற்சித்து தான் பாருங்களேன்.
சிங்கப்பல் எல்லாம் அவரவர் அதிர்ஷ்டம் 


.. .





