நான் எனப்படும் நான் : 184
” Doing it with Relaxed Mind is .. a Beautiful Skill “



ஆரம்ப இள வயது காலங்களில் எழுந்தவுடன் 30 நிமிடங்களில் என் அன்றைய நாளுக்கு தயாராகி விடுவேன். காலையில் எழுந்தால் … அடுத்த வேலை என்ன என்று என் உலகம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடும். சும்மா இருப்பது பிடிக்காது. Ceiling ஐ பார்த்துக்கொண்டு அமர்ந்து இருப்பவர்களை பார்த்தால் … ஏன் இப்படி அமர்ந்து இருக்கிறார்கள் என்று கேட்க தோன்றும். ” வேறு வேலை இல்லை போல ” என்று மனதிற்குள் ஒரு பார்வை வீசும்.
” We Make our own Perceptions .. and choose what we want choose “



நடுவயது காலங்களில் …இது இன்னமும் அதிகமாக மாறியது. 30 நிமிடங்கள் என்பது 25 ல் தயாராகி விடுவது .. என்று மாறத்துவங்கியது. வேகம் மட்டுமே அழகு .. என்று மனம் துள்ளியது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதவர்களை பற்றி அவ்வளவாக யோசிக்காமல், அல்லது மனதளவில் அவர்களுக்கு தேவையான Space ஐ கொடுத்துவிட்டு … என் பயணத்தை தொடர்வதில் மிக குறிப்பாக இருந்திருக்கிறேன்.
” Focus is a sticky wicket. Sometimes …. To stay in Focused state, we may miss the Obvious, staying in front of us “



இப்போதெல்லாம் .. காலையில் எழுந்தால் .. தயாரான பின் …முதலில் Green Tea யுடன் 40 – 45 நிமிடங்கள் நிதானமாக அமர்கிறேன். Sip by Sip ஆக ரசித்து குடிக்கிறேன். பழையனதில் சிறந்தவை நினைப்பது யதார்த்தமாக நடக்கிறது. அவற்றுக்கு மனதளவில் நன்றி சொல்கிறேன். அடுத்து என்ன செய்யலாம் என்பது மேல் இருந்து உருளும் பனிக்கட்டி பந்தாக உள்ளுக்குள் உருள்கிறது. BPM ஐ check செய்தால் … 45 ல் இருந்து 75 க்குள் .. வந்துவிடுகிறது. மனம் ஏதோ ஒன்றில் இலயிக்கிறது. மிக மிக .. நிதானமாக என்னை உணர்ந்த பின்னே .. Cycling, Slow Jogging அனைத்தும் ஆரம்பிக்கிறது.
இந்த மாற்றம் பல காரணங்களால் நடந்திருக்கலாம். அவற்றில் சில என்று இங்கே பகிர தோன்றுகிறது.





” Watch a Drop falling from a Leaf. It has so much action to bring lot of Self Realization within “



” என்ன செய்கிறாய் ? “
கேட்ட Monk ஐ பார்த்து இன்னொரு Monk சொன்னார் …
” இந்த செடியில் பூத்திருக்கும் பூவை கவனிக்கிறேன். நேற்றுக்கு இன்று நிறம் மாறியிருக்கும் விகிதம் அழகாக புரிகிறது “


