நான் எனப்படும் நான் : 187
” Waiting period is a Treasure. We can do more wonders ! “



ஒரு Meet க்காக சற்று முன்னே வந்த நான் காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் என்ன செய்யலாம் ? நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் ?
கொஞ்சம் கவனிப்போம்.




” யாரும் இல்லாத
இந்த பொழுதில்
என்னை ஏன் எனக்கு
மிக மிக பிடிக்கிறது …
நான் நானாக
இருக்க முடிவதாலா ? “


” CCD யில் இன்னமும் இவர்கள் செய்திருக்க வேண்டியவை என்ன ? “




(என்னவோ என்னவோ … என் வசம் நான் இல்லை … )
இப்படி இன்னமும் நிறைய. சொல்லப்போனால் .. வர வேண்டியவர்கள் Late ஆக வந்தால் …மனம் மகிழ்வாகவே இருக்கிறது. இன்னமும் சரியாக சொன்னால் ” கொஞ்சம் Late ஆவே வாருங்கள். ஒன்றும் அவசரமில்லை. ” என்று சொல்ல முடிகிறது.



ஆனால் …
இவை அனைத்தையும் விட காத்திருத்தலின் போது நான் மிக மிக விரும்பும் இன்னொன்றை செய்வது உண்டு. அது ..
Just அமைதியாக அமர்ந்து இருப்பது. மனிதர்களை இயக்கங்களை கவனிப்பது. கடந்த கால எதிர்கால விடயங்களை Trash ல் எறிந்து விட்டு … Just அமைதியாக அமர்ந்து இருப்பது !
அதை நாம் பொதுவாக செய்வது இல்லை. TV வந்ததும் கொஞ்சம் செய்தோம். Mobile வந்ததும் செய்வதே இல்லை. எப்போதும் எதனுடனோ நம்மை இணைத்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அப்படி எல்லாம் இல்லாது .. குளிர் ஊட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள், கண்ணாடி வழியே தெரியும் Muted மனிதர்களை, இயக்கங்களை கவனித்து Witness ஆக அமர்ந்து இருப்பது !
அப்போதைக்கு Mostly BPM 45 ல் இருந்து 55 க்குள் இருக்கும். கிட்டத்தட்ட Meditative Mode அது !



அப்போது இருக்கும் முகத்தின் புன்னகை தான் இங்கே Selfi ஆக !
அப்படி நீங்கள் இருந்தது உண்டா ? இல்லை எனில் .. இருந்து தான் பாருங்களேன். என்னவோ ஒரு வசிய அமைதி உள்ளே புகவும், என்னவோ ஒரு நிறைவு சிரிப்பு முகத்திலும், என்னவோ ஒரு மௌன உடல் மொழி உடலிலும் … அங்குலம் அங்குலமாக பரவுவதை நாம் உணரக்கூடும்.
உணர்வோமா ?


