நான் எனப்படும் நான் : 186
” Everywhere Life waits for You “



Mall களுக்கான உலகம் வேறு வகை. அங்கே உள்ளே நுழையும்போதே … வழக்கமான சாலையில் என்னவெல்லாம் நம்மை முகம் சுழிக்க வைக்குமோ .. அனைத்தையும் சுத்தமாக கொடுக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள். யாரோ பெண்மணிகள் துடைத்து கொண்டே இருக்கிறார்கள். யாரோ ஆண்கள் Washroom ஐ கழுவிக்கொண்டே இருக்கிறார்கள். அங்கே இன்னொரு ஆச்சர்யமும் நடக்கிறது. வழக்கமான சாலையில் குப்பைகளை எறிந்து விட்டு ” எவனோ சுத்தம் செய்துக்குவான் ” என்கிற அதே நாம் தான் அங்கே எங்கே குப்பைகளை இட வேண்டுமோ அங்கே விடுகிறோம். பேச்சை குறைவாக பேசுகிறோம். Mall க்கென்று தனி உடை வைத்துக்கொள்கிறோம். கோபத்தை கூட எங்கோ ஒதுங்கி ஒடுங்கி காண்பித்துவிட்டு சிரித்துக்கொண்டே வெளிவருகிறோம். ஆக .. Mall என்பது வேறு வகை அல்ல. அது ஒரு பெரும் கட்டிடம். அங்கே நாம் தான் வேறு வகையாக இருக்கிறோம் !
” Its our actions that gives definition for everything. “



Parking ல் அவர் சொன்னார்
” இங்கே நிறுத்தலாம் சாரே “
நான் சிரித்தேன். மிக குறுகலான இடம். எனக்கு பரவாயில்லை. புதியதாக Driving கற்றுக்கொண்டவர்களுக்கு ?. குறிப்பால் உணர்ந்து அவரே சொன்னார் …
” நாங்களே நிறுத்திவிடுவோம் “
” சாப்டீங்களா ? “
” இல்ல சாரே .. இனிமே தான் “
” மணி 12 ஆச்சே .. இன்னமும் சாப்பிடலையா ? “
” இன்னைக்கு வேலைக்கு வர வேண்டிய ஆள் Leave … அதனால … இனிமேல் தான் …. வயிற்றுக்கு தான் உழைக்கிறோம் சாரே … ஆனால் இப்படித்தான். எதுக்காக போறமோ அதுவே சமயத்தில் கிடைக்கறது இல்லை சாரே “
சுரீர் என்றது எங்கோ.
” Sometimes we don’t get what we truly work for “



Lift ல் ஒரு இளம் ஜோடியும் நானும் மட்டும்.
” அம்மா அப்பா சொல்றதை எல்லாம் எடுத்துக்க வேண்டாம் ” இது ஆண்.
” அப்படி இல்ல … எம் பொண்ணு மாதிரி எம் பொண்ணு மாதிரி ன்னு சொல்றாங்க .. இப்போதான் புரியுது .. ” மாதிரி ” ன்னு தான சொன்னாங்க ” இது பெண்.
அவர்கள் வெளியேற அடுத்த ஒருவர் Phone ல் பேசிக்கொண்டே வந்தார்
” We have no need to follow everything what we say. We can follow some of the things we say. Right ? “
என்று அதிகார தோரணையில் அவர் கேட்க …எதிரே ” Yes Sir ” சொல்ல Lift நின்றது.
பாடங்கள் எவ்வளவு இயல்பாக எங்கும் இறைந்து கிடக்கின்றன.
எடுக்கிறோமா நாம் ? என்பது மட்டுமே தலையாய கேள்வி !


