நான் எனப்படும் நான் : 188
” Expect a Surprise always around the Corner ! “



” என்ன செய்யலாம் ? ” முகத்தை பார்த்தவாறே கேட்ட அவருக்கு 25 வயது இருக்கலாம்.
” Trim செய்யலாம். பிறகு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் “
இருவருக்கும் இடையில் மென் சிரிப்பு.
நாகர்கோவில் அப்படியே இருக்கிறது. அமைதியாய். காற்றோட்டமாய். மனதில் செழிப்பாய்.
Trim செய்ய ஆரம்பிக்கும்போதே தொழில் நேர்த்தி தெரிய ஆரம்பித்தது. மேலே போர்த்தப்பட்ட துணி ஒரு வித ” மெல்லிய இதமான ” உணர்வை ஒவ்வொரு முறை உடலை வருடும்போதும் கொடுக்க ஆரம்பித்தது. ( பொதுவாக Saloon களில் போர்த்தப்படும் துணி வியர்வையை கொண்டு வரும் அல்லது ஒரு வித இறுக்கத்தை கொண்டு வரும் ). வாடிக்கையாளர் பார்வையை கணிக்கும் நிறுவனம் வெற்றி பெற்று விடும்.
” Its all about the Skill of Looking from Customer’s perspective – That’s where Growth waits “



” Trim ok வா ? “
” Yes. “
என்ன செய்ய வேண்டும் என்று சொன்னேன். செய்ய ஆரம்பித்தார்.
Saloon களில் காலை வேளையில் யாரும் இல்லா நேரங்களில் இருந்தால் அது ஒரு பெரும் வசதி. தொழில் செய்பவர்கள் முழு Focus ல் இருப்பார்கள். ” Fresh Mind & Full Focus ” ஒரு வரம். Music ல் bullet song. ஒரு நாளின் துள்ளல் ஆரம்பம்.
” ok வா ? “
” Yes “
இருவரும் சிரித்தோம்.
” Head Massage ? ” கேட்டேன். இரவு Drive மற்றும் சில நாட்களாகவே ஓடிக்கொண்டே இருக்கிறேன். கொஞ்சம் குளிர வைக்கலாமே !
” Yes. “
அவர் ஆரம்பித்தார். சிலரின் Head Massage தலையில் தென்றலும், மென் நீர்வீழ்ச்சியும் கலந்து விழுவது போல அழகாக இதமாக அமையும். ( சிலர் மத்தளம் வாசிப்பார்கள். கொடுமை ! ).
இலேசாக கண் அயர்ந்தது. அதுதான் Head Massage. பின் கழுத்தில் இரு பக்கமும் இழுத்து மென்மையாக இணைப்பதில் இருந்தது அவரின் Expert நுணுக்கம். முடித்து சீவி நிமிர்ந்த போது
” ஒண்ணு செய்யலாமா ? ” கேட்டார்
” Yes “
” வாரும் விதத்தை opposite ல் கொண்டு வாங்க. எப்பவும் Oily hair ஐ maintain செய்யணும். உங்க முகத்திற்கு சரியா இருக்கும் “
செய்து கண்ணாடி பார்த்த look தான் இங்கே. நான் Kerala வின் அருகில் இருக்கிறேன் – என்று உள்ளே சிரித்தேன்.
” அடிப்பொலி ” அவர் சிரித்தார்.
இருவரும் சிரித்தோம்.
” When You Submit yourselves truly, A New Perspective Evolves “



” எத்தனை வருட அனுபவம் ? ” கேட்டேன்
” இரண்டு ” சொல்லிவிட்டு எளிமையாக நின்றார் சிரித்தார்.
வெளியே வந்தால் வெயில். ஆனால் இன்னமும் அந்த Oil ன் குளுமையும், massage ன் impact ம், மென் பேச்சு சிரிப்பும் .. உள்ளே உயிரோட்டமாக மீண்டும் மீண்டும் தன்னை கொடுத்துக்கொண்டே இருந்தது.
” Life is nothing but the accumulation of Small & Effective memories “


