நான் எனப்படும் நான் : 193



“A goal is not always meant to be reached, it often serves simply as something to aim at.”
இலக்குகளை நாம் அடைவதற்காக மட்டும் என்று குழப்பிக் கொள்கிறோம். இலக்குகள் அதற்கானவை மட்டும் அல்ல. அவை வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஒரு குறிக்கோளை அளிப்பவை. ஓடும் வேகம், ஓடும் திறன், ஓடும் உடலுக்கு எண்ணத்தை அளிக்கும் மனதின் சமநிலை .. போன்றவற்றை அடுத்த நிலைக்கு கொண்டு செல்பவை இலக்குகள் தான்.



“For it is easy to criticize and break down the spirit of others, but to know yourself takes a lifetime.”
மற்றவர்களை குறை சொல்லுதல் எளிது. அதிலும் ” இப்படி இருந்தால் நல்லது ” என்று அறிவுரை சொல்வது இன்னமும் எளிது. ஆனால் மிக மிக சவாலாக இருப்பது நம்மை சரி செய்து கொள்வது மட்டுமே. உண்மையை சொன்னால் …” நம்மை சரி செய்து கொள்ளவே இந்தப் பிறப்பு போதாது “. அப்படி எனில் ஏன் கவனம் மற்றவர்களை நோக்கி செல்கிறது ? காரணம் மிக எளிது.
நாம் மாற வேண்டும் எனில் எண்ணம் மாற வேண்டும். மற்றவர்கள் மாற வேண்டும் எனில் … நம் எண்ணம் மாற வேண்டியது இல்லை. இது ஒரு வித எண்ண சோம்பேறித்தனம்.
என்ன .. உங்களிடமும் இது இருக்கிறதா ?



“The more we value things, the less we value ourselves.”
பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தங்களின் முக்கியத்துவத்தினை கவனிக்க புரிந்து கொள்ள தவறுகிறார்கள். அதனால் அவர்களிடம் இரண்டு விடயங்கள் நடக்கும்.
பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ( Car, Land, Cash, Bungalow .. ) ஒரு வித Superiority Complex ல் வாழ்கிறார்கள்.
” இந்த இடத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா உனக்கு ? ” போன்ற கேள்விகளில் இதை புரிந்து கொள்ளலாம்.
தன்னை புரிந்துகொள்ள மறுப்பதால் ஒரு வித Inferiority Complex ல் வாழ்கிறார்கள்.
” யாராவது Reference இருந்தா அங்க போனா மரியாதையா இருக்கும். நாம பெரிய ஆளா இருந்தாலும் … தனியா போக ஒரு மாதிரியா இருக்கு ? “



Part 03 ல் சந்திப்போம்.


